ஆடு மயிலே கூத்தாடும் மயிலே கதிர்காம கந்தனை கூத்தாடும் மயிலே என பெங்களூர் ரமணியம்மாள் உருகி பாடிய பக்தி பாடலை கேட்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட கதிர்காம முருகன் எங்கிருக்கிறார் என்றால் கதிர்காமத்தில் இருக்கிறார் என சொல்லி விடலாம். சரி கதிர்காமம் எங்கே இருக்கிறது? இலங்கையின் கண்டியில் உள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 122 கிமீ தொலைவில் கண்டி நகரம் உள்ளது.இங்குதான் கதிர்காமம் முருகன் கோவில் உள்ளது.
மிக சிறப்பான இக்கோவிலில் பெளத்த துறவிகளும் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.
அருணகிரிநாதர் இக்கோவில் முருகனின் முக்கிய ஸ்தலம் என்று தனது பாடல்களில் அறிவித்தார் .
ஸ்ரீவள்ளியை முதன் முதலில் இங்குதான் முருகன் சந்தித்தார் என கூறப்படுகிறது.
இமயமலையில் இன்றும் உயிர்ப்புடன் வாழ்ந்து வரும் மஹான் மஹா அவதார் பாபாஜியும் இங்கு வந்து சென்றிருக்கிறார்.
இலங்கை மக்கள் இந்த கோவில் முருகனை தங்களது காவல் தெய்வமாக தங்களை காக்கும் தெய்வமாகவும் பாவிக்கின்றனர். இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் மக்களும் உண்டு.
இந்த கோவிலில் வித்தியாசம் என்னவென்றால் மூலவர் சிலை உற்சவர் சிலை கிடையாது. அதற்கு பதில் முருகனின் படம் உள்ளதிரைச்சீலைக்குத்தான் வழிபாடு நடக்கிறது. வேண்டுவனவற்றை நிறைவேற்றும் இந்த முருகனை புத்த பிட்சுகள் பலர் வழிபட்டு வருகின்றனர். திருவிழாக்காலங்களில் முக்கிய விழாக்களை தலைமையேற்றும் நடத்துகின்றனர்.
இலங்கை சென்றால் கண்டி கதிர்காமம் முருகனை வணங்க மறவாதீர்கள்