புதுக்கோட்டை மாவட்டத்தில் இக்கோவில் உள்ளது புதுக்கோட்டை திருச்சி முக்கிய சாலையிலேயே நார்த்தாமலை ஊர் உள்ளது இங்கு இந்த அம்மன் கோவில் உள்ளது.
ஒரு பழைய பக்தி பாடலில் நார்த்தாமலை வாழும் சிவநாயகியார் திரிசூலி என்ற வரிகளை நீங்க கேட்டிருப்பீர்கள்.
இங்குள்ள அம்மன் மிக சக்திவாய்ந்த தெய்வமாக சுற்று வட்டார மக்களால் வணங்கப்படுகிறார். சுமார் 1000ஆண்டுகள் பழமையான கோயிலாக இக்கோவில் கருதப்படுகிறது. நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில்.
இக்கோயிலின் பிரதான தெய்வமாக முத்துமாரியம்மன் இருக்கிறார். அம்பாளுக்கு பூவாடைக்காரி என்கிற பெயரும் உண்டு. இக்கோயிலின் தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. நாரதர் வந்து சில காலம் தங்கி இருந்த இடமாம் இது அதனால் நாரதரகிரிமலை” என புராண காலங்களில் அழைக்கப்பட்டு காலப்போக்கில் “நார்த்தாமலை” என்ற பெயரை பெற்றுவிட்டது.
இந்த கோவில் மூலவர் தெய்வமான முத்துமாரியம்மன் வயல்வெளியில் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, ஒரு கோவில் அர்ச்சகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டும் பின்பு ஒரு ஜமீன் தார் ஒருவரின் முயற்சியால் இப்போதுள்ள கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.
தீராத வியாதிகள், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்கள் இந்த அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்து வழிபட்டால் இது போல பிரச்சினைகள் தீருமாம்.இங்கு செல்ல விரும்புபவர்கள் பிரதான நகரான புதுக்கோட்டையில் இருந்து இவ்வூருக்கு செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.