கந்தகோட்ட முருகன் கோவில் பெருமைகள்

சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் கந்தகோட்டம் முருகன் கோவிலும் ஒன்று. சென்னை நகரம் பெரிய நகரம் என்பதால் புதிதாக செல்பவர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். நமக்கு பிடித்த கோவிலுக்கு செல்வதென்றாலும்…

சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் கந்தகோட்டம் முருகன் கோவிலும் ஒன்று. சென்னை நகரம் பெரிய நகரம் என்பதால் புதிதாக செல்பவர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். நமக்கு பிடித்த கோவிலுக்கு செல்வதென்றாலும் குழப்பமாக இருக்கும். அட்ரஸ் தேடி அந்தகோவில் செல்வதற்குள் குழப்பமாகி விடும். இந்த கோவில் அப்படியல்லாமல் மிக ஈஸியான பிரதான இடத்தில் உள்ளது.

9d46360266c732e34ff4484f9c833d04

ஆம் சென்னை நகரின் முக்கிய இடமான சென் ட்ரல் ஸ்டேஷன் அருகிலேயே இக்கோவில் உள்ளது. சென் ட்ரல் ஸ்டேஷனுக்கு சென்னையின் அனைத்து இடங்களில் இருந்தும் அடிக்கொருமுறை பஸ் வசதி உண்டு.பாரிமுனை{பிராட்வே} செல்லும் பேருந்துகள் இங்கு{சென் ட்ரல் ஸ்டேஷனில்} நின்று செல்லும்

பேருந்தில் ஏறி சென் ட்ரல் ஸ்டேஷனில் இறங்கினாலே அருகாமையில் உள்ள இக்கோவில் சென்று விடலாம்.சிறிது தூரம் நடந்து சென்றால் கோவிலை அடையலாம்.

இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர்.

அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், “தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்.அதன் அடிப்படையில் இக்கோவில் உருவாகியுள்ளது.

இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

சென்னை சென்றால் கந்தக்கோட்ட முருகனை தரிசனம் செய்து வாழ்வில் வளம் பெறுங்கள். முன்பு இந்த இடம் பெத்தநாயக்கன் கோட்டை என்று அழைக்கப்பட்டதாம் கந்தன் வந்த பிறகு கந்தகோட்டமாக மாறியுள்ளது.

திருப்போரூரில் அன்னியர்கள் பிரவேசத்தின்போது அங்கிருந்த சிலை ஒன்று புற்றுக்குள் வைத்து மறைக்கப்பட்டதாம் அந்த சிலை இருந்த இடத்தைதான் தன் பக்தர்களுக்கு காண்பித்து கோவில் கட்ட வைத்துள்ளார் முருகன்.

சென்னை சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய கோவில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன