தூத்துக்குடியில் இருந்து முக்கிய நகரமான திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தெய்வச்செயல்புரம். இங்கு சாலை ஓரத்தில் உள்ளது வானை முட்டும் அளவு காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலையுடன் உள்ள கோவில்.
இந்த கோவில் அம்மன் கோவில் இங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் காட்சி தருகிறாள். இங்குதான் இந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இங்கு உள்ள ஆஞ்சநேயரின் உயரம் 77 அடி.
இவரின் பெயர் விஸ்வரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் எனப்பெயர். இவர் ராமபிரானை வணங்குவது போல் அமைப்பு உள்ளே உள்ளது.
வடைமாலை, வெற்றிலை மாலை சாற்றி வணங்கும்போது தொடர் வெற்றியை இவர் தருவதால் தூத்துக்குடியை சேர்ந்த பலரும் திருநெல்வேலியை சேர்ந்த பலரும் இந்த கோவிலுக்கு வந்து செல்வர்.
இன்று மார்கழி மாத மூலம் நட்சத்திரத்தில் அனுமன் பிறந்த நாள் வருகிறது .அனுமனை வணங்கி வாழ்வில் வளம் பெறுங்கள்.