மகாசிவராத்திரி நாலுகால பூஜையின்போது செய்யவேண்டிய அபிஷேகங்கள்!

சிவராத்திரியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்து முடித்து சிவ ஆலயத்துக்கு சென்று சிவதரிசனம் செய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து மாலையில் சிவ ஆலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு இறைசிந்தனையோடு இறைவனை தொழுதல்…

f0d6ea6bf5c871e4ebe96004575bc152

சிவராத்திரியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்து முடித்து சிவ ஆலயத்துக்கு சென்று சிவதரிசனம் செய்து, அன்று முழுவதும் உபவாசமிருந்து மாலையில் சிவ ஆலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு இறைசிந்தனையோடு இறைவனை தொழுதல் வேண்டும். இரவு முழுக்க விழித்திருக்க முடியாதவர்கள் நான்காம் கால பூஜைக்காலம்வரையாவது கண்விழித்திருப்பது நலம் பயக்கும்.. இனி சிவராத்திரியன்று செய்யப்படும் நான்கு கால பூஜைகளின் விவரமும், அந்த காலக்கட்டத்தில் செய்யவேண்டிய அபிஷேகம், அலங்கார வகைகளை பார்க்கலாம்..

30b55f5d6535279c679c53ed7415fe8d

முதல் கால பூஜை;
இதை பிரம்மதேவன் சிவனை நோக்கி செய்வது. இந்த காலத்தில் பூஜிப்பது பிறவித்துன்பத்திலிருந்து விடுபட செய்யும். பஞ்சகவ்யம் அபிஷேகம், சந்தனப்பூச்சு, வில்வம் அர்ச்சனை, தாமரை அலங்காரம் , பாயாசம் நிவேதனம் செய்து ரிக்வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

இரண்டாம் கால பூஜை;
இதை மகாவிஷ்ணு சிவனுக்கு செய்வதாய் ஐதீகம்.. இந்த காலத்தில் பூஜிப்பது தன, தான்ய சம்பத்துகள் கிடைக்கும். சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்த பூச்சு, துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம் செய்து யஜூர் வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

மூன்றாம் கால பூஜை:
இந்த பூஜையை சக்தியின் வடிவமான அம்பாள் செய்வதாக ஐதீகம். இதைதான் லிங்கோர்பவ காலம் என்பது. சிவனின் அடிமுடியை காண விரும்பிய பிரம்மா அன்னமாகவும், விஷ்ணு வராகமாகவும் தோன்றி விண்ணுக்கும், மண்ணுக்கும் புறப்பட்ட நேரமாகும். இந்த காலத்தில் பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் சக்தி காப்பாள். தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சாத்துதல் மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம் செய்து சாம வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

நான்காம் கால பூஜை;
இந்த பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் செய்வதாக ஐதீகம். பதவி உயர்வும், இல்லறம் இன்பமாகவும், நினைத்தது நடக்கும். கரும்புச்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்தி, அல்லி, நீலோர்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், வில்வ அர்ச்சனை செய்து சுத்தான்னம் நிவேதணம் செய்து அதர்வண வேதத்தை பாராயணம் செய்தல் நலம்.

சிவராத்திரி விரதமென்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில், சினிமா, தொலைக்காட்சி, ஃபேஸ்புக் மாதிரியான எதிலும் மனதை அலைப்பாய விடாம சிவசிந்தனையோடு சிவபுராணம், பெரியபுராணம், திருவிளையாடல் மாதிரியான இறை புத்தகத்தினை பாராயணம் செய்து சிவராத்திரி விரதத்தை முறையாய் அனுசரித்து இறையருள் பெறுக!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன