இந்தியாவை ஆள்வது, தமிழ்நாட்டை ஆள்வது, அமெரிக்காவை ஆள்வது யார், சீனாவை ஆள்வது யார் போன்ற தகவல் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விசயம்.
பூமியில் கொங்கண சித்தர் தலைமையில் ஆட்சி ஏற்படபோகிறது, அதன் மூலம் உலகத்தில் தர்மம் தழைக்கபோகிறது எனவும் அனைத்து மக்களும் இதனால் நலமுடன் வாழ்வர் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இணையதளங்களில் சில ஆன்மிக எழுத்தாளர்கள் , ஜோதிடர்கள் எழுதி வருகின்றனர்.
அதில் கடுமையான நெருப்பு பாதிப்புகள் ஏற்படும்போது கொங்கணவர் வருவார் எனவும், பல சித்தர்கள் பல வருட தவம் கலைத்து எழுந்து வரும் நேரம் இது எனவும்,
வரும் 2037 முதல் சித்தர்கள் தலைமையில் ஆட்சி ஏற்படபோகிறது எனவும் இந்த 17 ஆண்டுகளுக்குள் பலவித பேரிழப்புகளை சந்தித்து, பூமி அதில் இருந்து மீண்டு வந்து மக்கள் அமைதியான முறையில் வாழ்வர் என சில ஆன்மிக எழுத்தாளர்களின் பதிவுகள் குறிப்பிடுகிறது.
இது எல்லாம் உண்மையா பொய்யா என்பதை விட, உண்மையாக இது இருந்து உலகம் அமைதியாக வாழாதா என்றே மனம் நினைக்க தோன்றுகிறது.
2037 முதல் பல வருடங்களுக்கு சித்தர் பெருமக்களே ஆட்சி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது
இது பற்றி முகநூலில் சில நாட்களாக ஒரு பதிவு சுற்றி வருகிறது. அந்த பதிவு இதுதான்.