மிக நீண்ட சூரிய கிரகணமான இன்று காலை 10.20முதல் 2.17வரை நிகழவிருக்கிறது. இந்த நேரத்தில் இறைவனை தொழுதலை மட்டுமே செய்யவேண்டுமென சாஸ்திரங்கள் சொல்கின்றது. வெளியில் செல்வதையும் சூரிய கிரகணத்தை வெற்று கண்களாலும் பார்ப்பதை தவிர்ப்பது நலம். கர்ப்பிணிகள் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். அப்படி வெளியில் செல்லும்போது தர்ப்பையை மோதிரமாகவோ தலையிலோ வைத்துக்கொள்ளவும். சூரிய கிரகணத்தின் கதிர் நேரடியாக உடலில் படாதவாறு பார்த்துக்கொள்ளவும்..
கிரகணத்தால் ஏதும் தோஷம் பீடிக்காமலிருக்கவும், கிரகண கதிர்களால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படாமலிருக்கவும் நாட்டு நலனுக்காகவும், கிரகணத்தின்போது பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் சூரிய பகவான் மந்திரங்களை சொல்லிவர கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்..
சூரிய காயத்ரி மந்திரம் :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
காயத்ரி மந்திரம் 2
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
இம்மந்திரத்தை உச்சரித்து கிரகணம் முடிந்தபின் கல் உப்பு சேர்த்த நீரில் குளித்து, வீட்டினை சுத்தப்படுத்தி, இறைவனுக்கு பூஜை செய்தபின்னரே உணவு உட்கொள்ளவேண்டும். மற்ற வேலைகளை தொடங்க வேண்டும்..
நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!