இன்று ஏகாதசி, வாழ்வில் வசந்தம் பிறக்க இந்த மந்திரம் சொல்லி விஷ்ணு பகவானை வழிபடுவோம்.

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை. அதனால் ஏகாதசி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். கீழ்க்காணும் இந்த மந்திரத்தினை…

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை. அதனால் ஏகாதசி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். கீழ்க்காணும் இந்த மந்திரத்தினை ஏகாதசி தினத்தில் மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம். 

ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ  பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்

விஷ்ணு பகவானுக்கு பிடித்தது தாமரை மலர். வாசனை உள்ள மலர்களையே இறைவனுக்கு சமர்பிக்க வேண்டும். அந்த விதியிலிருந்து தாமரைக்கு மட்டும் விதிவிலக்கு. லட்சுமி வாசம் செய்வதால் சிவப்பு தாமரை மலர் வைணவ வழிபாட்டில் ஈடுபடுகிறது. அவ்வாறே, சரஸ்வதிதேவி வெள்ளை தாமரையில் வீற்றிருப்பதால் வெள்ளை தாமரை மலர் சரஸ்வதி தேவி வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன