வீட்டில் வைத்து குலதெய்வத்தை வழிபாடு செய்யலாமா…? வழிபடும் முறையும் நேரங்களும்…

By Meena

Published:

இந்து மத வழிபாட்டில் குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும். ஒரே குலத்தைச் சேர்ந்த ஒன்று அல்லது பல குடும்பங்கள் இணைந்து இந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வர். நம் மூதாதையர் எந்த தெய்வத்தை வணங்குவார்களோ அதையே வழிவழியாக அந்த வம்சத்தினர் பின்பற்றுவர்.

குலத்தை காக்க, குலம் விருத்தி அடைய குலதெய்வ வழிபாட்டை செய்வது அவசியம். எந்த பிற தெய்வத்தை வழிபடுவதற்கு முன்பே குலதெய்வத்தை வணங்கிவிட்டு தான் தொடங்க வேண்டும். சுப காரியங்கள், தொழில் தொடங்குவது போன்றவற்றிற்கும் இது பொருந்தும்.

குலதெய்வ வழிபாடு இல்லையென்றால் எத்தனை பூஜை ஹோமங்கள் செய்யதாலும் பலனில்லை என்பார்கள். நம் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யலாமா என்ற சந்தேகம் அனைவருக்கும் வரலாம். வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யும் முறையை இனிக் காண்போம்.

முனீஸ்வரன், அய்யனார் போன்ற குலதெய்வங்கள் ஆடவராக இருந்தால் அமாவாசை அன்றும், பெரியாயி, பேச்சி போன்ற குலதெய்வங்கள் பெண்ணாக இருந்தால் பௌர்ணமி அன்று வீட்டை சுத்தப்படுத்தி, பெண்கள் விளக்கேற்றி சர்க்கரை பொங்கல், பாயாசம் அல்லது மாவிளக்கு போன்று ஏதாவது ஒன்றை நெய்வேத்தியம் செய்து குடும்பத்தை காக்க வேண்டி வழிபட வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வம் இருக்கும் இடத்திற்குச் சென்று பொங்கல் வைத்தும், அசைவ உணவை ஏற்கும் கடவுளாக இருந்தால் கிடா செய்து வழிபட வேண்டும். குழந்தைகளுக்கு முதல் முடி இறக்குதலும், காதணி அணிவித்தலும் குலதெய்வ கோவிலில் நடத்துவது சிறப்பு. புதிய தொழில் தொடங்குபவர்கள் குலதெய்வத்தை நேரில் சென்று வணங்கி ஆரம்பித்தால் தொழில் விருத்தி ஆகும்.