ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்…..

By Staff

Published:

bbb588b55fe5bea22ebe3a8ec96c6915

உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தமும், பயனும் உள்ளது. அதுபோல தான் நாம் உபயோகிக்க கூடிய ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணமும், அர்த்தமும் உள்ளது. அப்படி என்றால் ஸ்படிக மாலை அணிவதற்கும் ஒரு காரணம் இருக்கும் அல்லவா…

ஸ்படிகம் என்பது என்ன? இந்த ஸ்படிக மாலை எப்படி கிடைக்கிறது…. என்று நமக்குள் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு இன்று நான் பதில் கூறுகிறேன். ஸ்படிகம் என்பது ஒரு பாறை. அதாவது ஒரு விதமான பாறை வகையைச் சேர்ந்தது. இது எப்படி உருவாகிறது என்றால் பல நூற்றாண்டுகளுக்கு மேல் மண்ணுக்கு அடியில் உள்ள நீர் இறுகி ஒரு பாறையாக உருமாற்றமடைந்தது. பின் இதிலிருந்து தயாரிக்கப்பட்டது தான் இந்த ஸ்படிகம்.

ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த ஸ்படிக மாலையை அணியலாம். 

மேலும் அதிகமாக கோபப்படுபவர்கள் இந்த ஸ்படிக மாலையை அணிந்தால் கோபம் தணிந்து உடனே இயல்பு நிலைக்கு திரும்பலாம். மேலும் ஸ்படிக மாலை அணிவதன் மூலம் தெய்வ அருள் பூரணமாக நமக்கு கிடைக்கும். 

இதை அணிவதால் தன்னம்பிக்கையும், ஒரு உற்சாகமும் கிடைக்கும். எனவே நாம் அனைவரும் ஸ்படிக மாலையை அணிந்து பயன் பெறுவோம்.

Leave a Comment