தீர்த்தம் அருந்துவதால் ஏற்படும் பயன்கள்……

By Staff

Published:

9d40274e9f778b51c898e2a87e2667b9

நம்மில் பெரும்பாலானோர்களுக்கு கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளது. நாம் பெரும்பாலும் கோவிலுக்கு எதற்கு செல்வோம் என்றால் மன நிம்மதி பெறுவதற்காக மட்டும் தான். அதாவது நம் வீட்டில் சண்டையோ, சிறு பிரச்சினையோ ஏற்பட்டால் அவற்றிலிருந்து விடுபட கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிப்போம்.

அப்படி கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்கும் போது பல கோவில்களில் தீர்த்தம் தருவது உண்டு. பெரும்பாலும்  பெருமாள் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் தான் தீர்த்தம் தவறாமல் தருவார்கள். பெருமாள் கோயில்களில் துளசி தீர்த்தமும், அம்மன் கோவில்களில் வேப்பிலை மஞ்சள் கலந்த தீர்த்தமும் தருவார்கள்.

இந்த தீர்த்தம் பருகினால் நாம் அனைவருக்கும் நல்லது என்பது மக்களின் நம்பிக்கை. பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதங்களில் தீர்த்தம் கொடுப்பார்கள். அதே போன்று அம்மன் கோவில்களில் மாசி, சித்திரை மாதங்களிலும் தீர்த்தம் தருவார்கள்.

ஏன் இந்த மாதங்களில் தீர்த்தம் கொடுக்கிறார்கள் என்றால் புரட்டாசி ஒரு மழைக்காலம் இந்த மாதத்தில் துளசி தீர்த்தம் சாப்பிட்டால் மழையால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை குணமாகும். இதேபோன்று கோடை காலத்தில் வேப்பிலை தீர்த்தம் சாப்பிட்டால் அது வெயிலால் ஏற்படும் தோல் நோய்களை குணப்படுத்தும்.

இதன் காரணமாகத் தான் கோவில்களில் தீர்த்தம் தருகிறார்கள்.

Leave a Comment