காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவிலின் திருக்குளமான அனந்த சரஸ் திருக்குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர், அனந்த சரஸ் கரையிலிருக்கும் மண்டபத்திற்ல் கடந்த ஜூலை 1லிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது 40 வருடங்களுக்கு ஒருமுறையே நிகழும் அற்புத நிகழ்வாகும்.
இப்படி வெளிவரும் அத்திவரதர் 48 நாட்களுக்கு வெளியிலிருந்து அருள்பாலித்து, மீண்டும் நீருக்குள் சென்றுவிடுவது வழக்கம். 48 நாட்களில் முதல் 24 நாட்கள் சயனக்கோலத்திலும், பின் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். ஜுலை 1லிருந்து சயனக்கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1லிருந்து, நின்ற கோலத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தார். அவ்வாறு காட்சியளிக்க ஆரம்பித்த அத்திவரதர் வலதுக்கையில் ‘மா சு ச’ என்ற எழுத்து பொரிக்கப்பட்டுள்ளது. அப்படி பொரிக்கப்பட்டுள்ள ‘மா சு ச’ எழுத்தின் அர்த்தமென்னவென பலவாறாய் பேசப்பட்டு வருகிறது.
இந்த ’மா சு ச’ என்ற எழுத்துகளின் விரிவாக்கம் இதுதான்.
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: என்ற பகவத் கீதையின் 18-66 பாடலில் வரும் ஸ்லோகத்தில் உள்ள எழுத்தாகும்.
இதற்கு, இங்கு உனக்குள்ளது என்று நீ நினைக்கும் எல்லாவிதமான பந்தங்களைப் பற்றிய பாசங்களை விட்டுவிட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன் என்றான் ஆண்டவன்.
இதுவே மா சு ச என்ற எழுத்தின் விரிவாக்கமாகும்…