அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?!

By Staff

Published:


அரச மரத்தில் பாசிடிவ் எனர்ஜி  அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அரச மரத்தைச்  சுற்றினால் அறிவு வளரும். மரத்தினடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அங்கு ஜெபம் செய்தலோ ,தெய்வ சம்பந்தமான  ஸ்தோத்திரம் பாராயணம் செய்தலோ நிறைய பலனை அடையலாம். அகிம்சையை போதித்த புத்தர் இந்த அரசமரத்தடியில் அமர்ந்து ,தவம் செய்து ஞானியானார்.கண்ணபிரான் கீதையில் ‘மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் ‘என்றார்.

33c81be0a41f0ab4ab1939236eb1a04e

அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகா விஷ்ணுவும், நுனிப் பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள் ஆகவே மும்மூர்த்திகளின் சொரூபமாக அரசமரம் திகழ்கிறது. அதனால்தான் அரசமரத்திற்கு பூஜை செய்வது,பிரதட்சணம் செய்வது ,துன்பத்திற்கு காரணமான பாவங்களை போக்கி நல்ல அறிவை பெற்று  தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன .

சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை 10.40 மணி வரையிலும் ,சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால்,அப்பொழுது அதிலிருந்து வெளிவரும் காற்று நமக்கு ,நமது உடலுக்கு நன்மையை தரும்.ஆகவே காலை 10.40 மணிக்குள் அரச மரத்திற்கு பூஜை,நமஸ்காரம் செய்வது நல்லது.

மற்ற நாட்களை விட சனிக்கிழமை காலை வேளையில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாக இருப்பதால் சனிக் கிழமையே வலம் வருவது நன்மைப்பயக்கும்.அரச மரத்தை 7 முறை சுற்றி வர வேண்டும். குழந்தைப் பாக்கியம் இல்லாத தோஷத்தை போக்கி ,குழந்தைப் பாக்கியம் தர இந்த வழிபாடு மிகவும் சுலபமானது. அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றை தொட்டு பார்த்தாளாம்  என்பது பழமொழி.அரசமரத்தை காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக் கூடியது.நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக் கிழமை காலை சுமார் 8.20 மணிக்குள் அரச மரத்தை பக்தியுடன் 12,54,108 முறை வலம் வர வேண்டும்.தீராத நோய் தீரும்.சனிக்கிழமை மட்டுமே அரசமரத்தை  தொட்டு வணங்க வேண்டும்.மற்ற நாட்களில் அரச மரத்தை கையால் தொடக் கூடாது.

அரச மரத்தைச் சுற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் 
மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே  நம: 

அரசமரத்தின் சக்தி பெரியது .அத்துடன் நம் ஆனை முக விநாயகரை வழிபட்டால் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தேடி தரும் .எனவேதான் நம் முன்னோர்கள் அரசமரத்துடன்  விநாயகரையும் வைத்து வழிபட்டனர். நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கிறது என்பதை இதன் மூலம்  அறியலாம். அமாவாசை திதியும்,திங்கட் கிழமையும் இணைத்து வரும் நாள் அமாசோமாவரம் என்று பெயர்.இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம்.தினந்தோறும் அரசமரத்தை சுற்றுவது நன்று.

cover-1520315009-1523960220

எந்தெந்த கிழமைகளில் சுற்ற என்ன பலன்கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
திங்கள் ——மங்களம் உண்டாகும் 
செவ்வாய் —– தோஷங்கள் விலகும்
புதன்  ——-வியாபாரம் பெருகும் 
வியாழன் —–கல்வி வளரும் 
வெள்ளி  —-சகல செளபாக்கியம் கிடைக்கும் 
சனி  ——-கஷ்டங்கள் விலகி லக்ஷ்மியின் அருள் கிடைக்கும் .

வரும் திங்கள் அன்று(4/2/2018) தை அமாவாசை வருகிறது. 60 வருடங்களுக்கொருமுறை வரும் அமாவாசை தினம் இது. இன்றைய தினம் திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் அரசமரத்தை சுற்றி பலன் பெறலாம்..

Leave a Comment