அனுமனுக்கு வடை மாலை சார்த்துவது ஏன்?!

By Staff

Published:


cd7ee0e18bb5077a5a17f3a11c22fd95

ஆஞ்சிநேயரை வழிபடும்போது வடையை நெய்வேத்தியமாவோ அல்லது வடைமாலையாய் சார்த்துவதையோ நாம் பார்த்திருப்போம். அப்படி, அனுமனுக்கு வடைமாலை சாத்துவதன் ரகசியம் என்னவென்றால்?!

 

அனுமன்,  சூரியனை பழமென நினைத்து பிடிக்கச்சென்ற அதேவேளையில், கிரகணம் உண்டாகும் நேரம் நெருங்குவதால் சூரியனை பிடிக்க, ராகுவும் விரைந்துக்கொண்டிருந்தார்கள். வாயு புத்திரனது வேகம் அசாத்தியமாய் இருந்ததை கண்டு, ராகு வியந்ததோடு, அனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். அனுமனின் வேகத்துக்கு பரிசாக, தனக்கு உகந்த தானியமான உளுந்தால் உணவுப்பண்டம் தயாரித்து அனுமனுக்கு சார்த்தி வழிப்பட்டால் ராகுவால் ஏற்படும் தோசம் நீங்குமெனவும், அப்படி வணங்குபவர்களை எக்காலத்திலும், தான் கஷ்டப்படுத்த மாட்டேனெனவும் வரம் தந்தருளினார். அப்பண்டமும், தன் உடலினைப்போல(ராகு பகவான் மனித முகமும், பாம்பு வடிவமும் கொண்டவர்) நீண்டு வளைந்து இருக்க வேண்டுமெனவும் நிபந்தனை போட்டதால் அனுமனுக்கு  வடைமாலை சார்த்தும் பழக்கம் உண்டானது.

85c61bb76cc23185f476084eedb4179b-1-2

இப்படி அனுமனுக்கு நைவேத்தியமா வடை செய்ய, கருப்பு உளுந்தை அதிகமா ஊறவிடாம உப்பும், மிளகும் சேர்த்து அரைச்சு, எண்ணெயில் பொரிச்செடுக்கனும். வெற்றுகைகளில் வடைகளை தட்டக்கூடாது. சுத்தமான வெள்ளை துணியில் வைத்துதான் தட்டனும். வடை தட்டும்போது பேசுதல், இருமுதல், தும்முதலின்போதும் எச்சில் தெரிக்காம இருக்க வாயில் வெள்ளை துணியை கட்டிக்கனும். பொதுவாக அனுமனுக்கு 27, 54, 108, 1,008 என்ற எண்ணிக்கையில் வடைகள் கோர்க்கப்பட்டு வடைமாலை சார்த்தப்படும். அனுமன் ஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் சில கோயில்களில் 1,00,008 என்ற எண்ணிக்கையில் வடை கோக்கப்பட்ட வடைமாலை சார்த்தப்படுகிறது.  இதில் 108, 1,008 ஆகியவை `பூரண வடைமாலை’ என அழைக்கப்படுது.  27 என்ற எண்ணிக்கையில் கோக்கப்பட்ட வடைமாலை, நட்சத்திரங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நற்பலன்களைப் பெறவும், 54 என்ற எண்ணிக்கையில் கோர்க்கப்படும் வடைமாலை கிரகங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நற்பலன்களைப் பெறவும் அனுமனுக்குப் சார்த்தப்படுகிறது.

 

 

Leave a Comment