பாடல்..
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறு ஆகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.
பொருள்..
பெண்ணே! திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் இறைவனின் திருப்பாதங்களை ரத்தினக்கற்கள் பதித்த மகுடத்தோடு, வானவர்கள் பணிந்து வணங்கினர். இறைவனின் ஒளிக்குமுன் ரத்தினங்கள் ஒளி இழந்தன. அதேப்போல கதிரவன் தோன்றியதால் இருள் நீங்கியது. விண்மீன்கள் ஒளிமழுங்கின. இந்த இனிய வைகறை வேளையில் ஆணாகவும், பெண்ணாகவும், அலியாகவும், விண்ணாகவும், மண்ணாகவும், கண் நிறைந்த அமுதாகவும் திகழும் கடவுளின் கீர்த்தியை பாடிப் பூம்புனலில் நீராடுவோம்!
விளக்கம்…
திருவண்ணாமலையிலிருக்கும் அண்ணாமலையாரின் அருமை பெருமைகளை விளக்கி அவனை வணங்க அழைப்பதாக அமைந்திருக்கு இப்பாடல்.
திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்….