ஆன்ம அறிவு – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்இருட்பிழம் பறஎறிந் தெழுந்தசுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்தூயநற் சோதியுட் சோதீஅடல்விடைப் பாகா அம்பலக் கூத்தாஅயனொடு மால்அறி யாமைப்படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்தொண்டனேன் பணியுமா பணியே விளக்கம்.. என்னுடைய துயரங்களைப்…

5d31c6988301643385166d57114bba59-1

பாடல்

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே

விளக்கம்..

என்னுடைய துயரங்களைப் போக்கி என்னை அடியவனாக ஏற்றுக்கொண்டு, என் உள்ளத்தில் உள்ள அறியாமையைச் செய்யும் ஆணவமலத்தை அடியோடு போக்குதலால் வெளிப்பட்டு விளங்கும் தூய்மையான அழகிய விளக்குப் போன்ற ஆன்ம அறிவினுள் ஒளிமயமாகக் காட்சி வழங்கும் மேம்பட்ட சோதியே! பகைவர்களை அழிக்கும் காளையை வாகனமாக உடையவனே! பொன்னம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! பிரமனும் திருமாலும் உன் உண்மை உருவத்தை அறியமுடியாதபடி எங்கும் பரவும் ஒளியைப் பரவச்செய்து எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கும் உன்னை உன் அடியவனாகிய நான் வணங்கும்படியாக நீ திருவுள்ளம் கொண்டு செயற்படுவாயாக.

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன