பரமக்குடியில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோவில் நகரின் மையப் பகுதியில் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள அனுமார் கோதண்டராமர் திருக்கோவில் ஆகும்.
இங்கு உள்ளே அமைந்துள்ள புளியமரம் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும் போது அதிலிருந்து விழுந்த விதையால் முளைத்த மரம் என சொல்லப்படுகிறது. இங்கு அனுமன் புளியமரத்தில் குடி கொண்டுள்ளார். இந்த மரத்தை ஆழ்வார் திருநகரில் உள்ள புளிய மரத்தோடு ஒப்பிட்டு பேசபடுகிறது. இந்த கோவிலின் சிறப்பு சுவாமி விவேகானந்தர் பரமக்குடி வந்த பொழுது இங்கு வந்து அனுமனை வணங்கி சென்றார்கள். காஞ்சி மடத்தின் பெரியவர் இங்கு வந்து அனுமனை வணங்கி புனிதபுளி ஆஞ்சநேயர் என்று பெயர் சுட்டி சென்றார்கள். இங்கு வந்து அனுமனை வழிபட்டு சென்றால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. சிறப்பு பூஜைகள் வாரம் சனிக்கிழமையில் இந்த கோவில் மக்கள் கூட்டத்தை சந்திகின்றது . இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தி மற்றும் ராம நவமி அன்று தலா 10 நாள் திருவிழா மிகசிறப்பாக கொண்டாடபடுகின்றன .