உலகின் மிகப்பெரிய கோவில் இது. இந்த கோவில் கம்போடிய நாட்டில் உள்ளது கம்போடிய நாட்டுக்கு வருமானம் தரும் முக்கிய கோவிலாக இது உள்ளது இந்த கோவிலை தரைத்தளத்தில் இருந்து முழுமையாக படம் பிடிக்க முயல்வது கடினம். ஹெலிகாப்டரில் சென்று வானில் பறந்து சென்று படம் பிடித்தால் முழுமையாக இந்த கோவிலை கவரேஜ் செய்ய முடியும்.
இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
இந்த கோவில் விஷ்ணு கோவிலாக கட்டப்பட்டு பின்பு வந்த மன்னன் ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார்.
1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.
இந்த கோவிலை கட்டுவதற்கு 40வருடங்கள் ஆகியுள்ளது அவ்வளவு சிற்ப வேலைப்பாடுகள் இக்கோவிலில் உள்ளது.
நம்ம ஊர் மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் சைஸில் இந்த கோவில் இருக்கும் இடத்தில் 20 கோவில்களை வைக்கலாமால் அவ்வளவு பிரமாண்டம் இந்த கோவில்.