பதினாறு செல்வங்களில் கல்வி செல்வமே முக்கியமான செல்வமாகும். கல்விச்செல்வம் மட்டும் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் உலகின் அத்தனை அம்சமும் கைக்கூடும். பிள்ளைகளுக்கு தேர்வு நெருங்கிகொண்டிருக்கின்றது. சரஸ்வதி தேவியின் அருட்பார்வை கிடைக்க கீழ்க்காணும் சரஸ்வதி தேவியின் மூலமந்திரத்தினை சொல்ல கைமேல் பலன் கிடைக்கும்.
சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
பொருள்: மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே! பிரம்ம தேவனின் பத்தினியே! நான் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே!
சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு எல்லா தினங்களும் சிறந்தது என்றாலும் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் தேவிக்கு வெள்ளை தாமரை மலர் சமர்ப்பித்து, அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவு நைவேத்தியம் வைத்து சரஸ்வதி காயத்ரி மந்திரங்களை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால் கல்வி செல்வம் கிட்டும்.