ஆடிப்பூரம் என்ற இந்த நாளை பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருப்பார்கள். ஒன்று வேண்டுதலுக்காக. அடுத்து அம்பிகை அந்த வேண்டுதலை நிறைவேற்றியதற்காக நன்றி சொல்ல. கல்யாணம் ஆகணும்னு வேண்டியவர்களும், குழந்தை வேண்டும் என்று வேண்டியவர்களும் அடுத்த ஆண்டுகளில் அவை நிறைவேறி அம்பிகைக்கு நன்றி சொல்லி வழிபாடு நடத்துவார்கள். முதல்ல ஆடிப்பூரம் வரும் நேரம் பற்றிப் பார்ப்போம்.
6.8.2024 அன்று மாலை 6.42 மணி முதல் 7.8.2024 அன்று இரவு 9.03 மணி வரை பூரம் நட்சத்திரம் அமைந்துள்ளது. வழிபாடு செய்ய காலை 6 மணியில் இருந்து 7.15 மணி வரையும், 9.05 மணி முதல் 10.20 வரை வழிபாடு செய்யலாம்.
குழந்தை, திருமண வரம் வேண்டி இருப்பவர்கள் என்ன செய்றதுன்னு பார்க்கலாம். அம்பாளின் திருவுருவப்படம் எடுத்து பொட்டு, சந்தன குங்குமம் வைத்து அலங்காரம் பண்ணிக்கோங்க. ஒரு மனப்பலகையை எடுத்து மாக்கோலம் போட்டு அதில் அம்பாளின் படத்தை எடுத்து வைங்க. இப்போது சந்தனம், குங்குமம், மஞ்சள், பூ என எல்லாம் தயார் பண்ணி சின்ன சின்ன தாம்பாளத்துல வச்சிக்கங்க.
வளைகாப்பு, சீமந்தம் பண்ற மாதிரி தான். நலுங்கு வைப்பதற்கு பன்னீர் சொம்பு வைப்பது போல எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளலாம். அம்பாளுக்குரிய சுலோகம் சொல்லி, மனமுருக அம்பாளை வேண்டி பூக்களால் அர்ச்சனை பண்ணலாம். அம்பாளின் திருமுகம், நெற்றி, கால், கைகளில் சந்தனம், குங்கும்வைக்கலாம்.
அட்சதையை பாதங்களில் சமர்ப்பணம் செய்யலாம். வளையல் மாலை தயார் செய்து கொள்ளுங்கள். அதைப் படத்தின் இருமுனைகளிலும் மாட்டி விடுங்கள். அம்பாளுக்கு ஆலம் கரைச்சி திருஷ்டி எடுங்க. அப்புறம் படத்தை எங்கு எடுத்தோமோ அங்கேயே வைத்து விடுங்கள்.
மனப்பலகையை கிழக்கு மேற்காக வைத்து இந்த பூஜையை வைத்துவிடுங்கள். அதற்கு மேல் வெள்ளைநிறத்துணியை விரித்துவிடுங்க. அதுல யாருக்கு குழந்தை வரம், கல்யாணம் நடக்கணுமோ அவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு சந்தனம் பூசி குங்குமம் வைத்து மலர்களால் வாழ்த்தி விட்டு, திருஷ்டி சுத்திப் போட்டு கையில் கண்ணாடி வளையல் போட்டு விடுங்க.
அடுத்த ஆண்டு நல்லபடியா குழந்தை வரம், கல்யாணம் நடக்கணும்னு வாழ்த்த வேண்டும். இதைத் தொடர்ந்து நம்பிக்கையோடு செய்து வந்தால் கண்டிப்பாக நடக்கும். ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, 1 ரூபாய் நாணயம் வைத்து மடி நிரப்ப வேண்டும்.
அதை எடுத்துவிட்டுப் பூஜை அறைக்குச் சென்று அம்பாளை மனதார வேண்டுங்கள். அந்தத் தேங்காயை இனிப்புப் பதார்த்தம் செய்யப் பயன்படுத்தலாம். இந்த சடங்குகளை பசங்களுக்கும் செய்யலாம். யாருமே இல்லாதபட்சத்தில் இந்த சடங்குகளைக் கணவரே மனைவிக்கும் செய்யலாம்.
இந்த நாள் மிகமிக விசேஷம். கோவிலுக்குப் போய் 1 டஜன் வளையலாவது வாங்கிக் கொடுத்து விடுங்க. அது அங்கு அம்பாள் பிரசாதமாகி விடும். அன்றைய தினம் உங்களால் முடிந்த அளவு 2 பேருக்காவது அன்னதானம் செய்யுங்க. தொடர்ந்து செய்கிறோம்.
எங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் கர்மவினைகளைப் பொருத்துத்தான் அது கொஞ்சம் காலம் எடுத்து நிறைவேறும். அதே மாதிரி தான் நம் பிரச்சனைகளின் வினைகளும் கர்மாவுடன் மோதி முண்டி அடித்து சரியாகும்.
அருகில் உள்ள கோவில்களில் உள்ள மரங்களில் தொட்டில் கட்ட வசதியிருந்தால் அங்கு போய் கட்டி விடுங்க. குளிச்சிட்டு ஈரத்துணியுடன் போய் எந்தக் கோவில்ல தொட்டில் கட்டணுமோ அங்கு போய் ஜாக்கெட் துணியில் இருந்து கொஞ்சம் கிழித்து விட்டு அந்தத் துணியில் கல்லைப் போட்டும் தொட்டிலாகக் கட்டி மரத்தில் தொங்க விடலாம்.
பிறகு உள்ளன்போடு பிரார்த்தனை செய்தால் உங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் நிச்சயமாகக் குழந்தை வரம் கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.