மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் முக்குறுனி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு வருடா வருடம் மிக பிரமாண்டமாக முக்குறுனி கொழுக்கட்டை படைப்பது வழக்கம். அதாவது 18 படி மாவில் செய்யப்படும் இந்த கொழுக்கட்டையானது மிக பிரமாண்ட கொழுக்கட்டையாக எடுத்து சென்று விநாயகருக்கு படைக்கப்படும்.
நேற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படைக்கும் வைபவம் நடைபெறும்.
பக்தர்கள் இன்றி முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் நடந்தது. கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பிரமாண்ட கொழுக்கட்டையை சிவாச்சாரியார்கள் சுமந்து வந்து விநாயகருக்கு செலுத்தினர்.