இந்தியாவில் அம்பிகை வழிபாட்டுக்கு என 52 சக்திபீடங்கள் உள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான கோவில்தான் உலகம்மன் கோவில். இது தேவிபட்டினம் என்ற ஊரில் உள்ளது.
இந்த ஊர் ஒரு பரிகார ஸ்தலம். ராமர் தன் கையாலேயே ஏற்படுத்திய நவக்கிரகங்கள் கடலுக்குள் உண்டு. இவை நவபாஷாணம் என்று அழைக்கபடுகிறது, இதை வைத்து இவ்வூர் புகழ்பெற்று விளங்குகிறது. இணையங்களில் கூட செய்திகள் கொட்டிக்கிடக்கும்
ஆனால் இவ்வூர் பெயருக்கு காரணமான உலகம்மன் கோவில் இங்கு உள்ளது. இதை பற்றி பலர் அறிந்திருக்க மாட்டர்.
தேவிபட்டினத்தில் ராமபிரான் காலடி படாத இடமில்லை. இது புண்ணியபூமியாக பார்க்கப்படுகிறது. பல பித்ருக்கள் ரீதியான தோஷங்களும், ஜாதகரீதியான தோஷங்களும் இந்த ஊர் கடற்கரையில் இருக்கும் நவபாஷாணத்தை வணங்கினால் நீங்கும் என்பது நம்பிக்கை.
தேவிபட்டினம் வருபவர்கள் ஊரோடு தொடர்புடைய ஊரின் காவல் தெய்வம் உலகம்மனையும் வணங்கி செல்லுங்கள். இது இந்தியாவில் உள்ள 52 சக்திபீடங்களில் ஒன்றாகும். உலகம்மன் என பேச்சு வழக்கில் இந்த அம்மனை அழைக்கின்றனர். ஜகத்தை ஆள்கின்றவள் என்ற அடிப்படையில் உலக நாயகி அம்மன் கோவில் என்று இதை அழைக்கின்றனர்.
இந்த அம்மனின் உருவம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் தலை மட்டுமே இருக்கும். சிறிய அளவில் காட்சி அளிக்கும் அம்மன் இது.
இவ்வூரின் பெயரோடு தொடர்புடைய உலகம்மன் கோயில் படையாச்சி தெரு என்னுமிடத்தில் உள்ளது. பட்டினம் என்பது கடற்கரையோரம் உள்ள நகரை குறிக்கும் சொல் ஆகும்.