கந்தன் புகழ் பாடி கார்த்திகை திருநாளை கொண்டாடுவோம்…!

By Sowmiya

Published:

சூரனை சம்காரம் செய்து வெற்றி கண்ட வடிவேலனை கார்த்திகை மாதம் கை கூப்பி தொழுதால் நல்வாழ்வு நமக்கு அமையும். கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கண்ட வேலன் வெற்றிக் களிப்போடு இருக்கும் மாதம் கார்த்திகை ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனென்றால் அதைத்தான் திருக்கார்த்திகை என்ற அடைமொழியுடன் அழைக்கிறோம். பெரிய கார்த்திகை என்று கூட சொல்வார்கள்.

murugann

திருக்கார்த்திகை நாளன்று முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான். கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபம் ஆகும் பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினை நாம் மேற்கொள்ள வேண்டும்.

murugan

பரணி தரணி ஆளும் என்பார்கள். எனவே பரணி நட்சத்திரம் அன்று நாம் முருகப்பெருமானை வழிபட்டால் தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும். முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நம் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். மறுநாள் ஆலயம் சென்று முருகப்பெருமான் சன்னதியில் வழிப்பட வேண்டும். கவச பாராயணம் பாடுவது நல்லது. வீட்டில் நல்லெண்ணெயிலும் ஆறுமுகப்பெருமான் சன்னதியில் இலுப்பை எண்ணெயிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது மரபு. வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும். “ஒளி கொடுத்தால் வழி கிடைக்கும்” என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.

lord Murugan

திருக்கார்த்திகை அன்று பூஜை அறையில் முழு முதல் கடவுள் விநாயகப் பெருமானின் படத்தோடு அவரது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண்டும். பஞ்சமுக விளக்கேற்றி அதில் 5 வகையான எண்ணெய் ஊற்றி கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

god murugan

“வழிக்குத் துணை வேலும் மயிலும் நம் மொழிக்கும் துணை முருகா எனும் நாமம்” என்று முன்னோர்கள் கூறி வைத்திருக்கின்றனர். எனவே கந்தன் புகழ் பாடி கார்த்திகை திருநாளை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.