நம் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவதற்கான முக்கிய காரணம் என்ன…? ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகளும் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளும்…

By Meena

Published:

ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம் ஆகும். இதுவே ரத்தத்தில் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. ஹீமோகுளோபினில் இருக்கும் இரும்பு நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜனை உடல் முழுவதும் விநியோகிக்கும். அது மட்டுமல்லாமல் ஹீமோகுளோபின் தான் ரத்தத்தின் சிவப்பு நிறத்தை கொடுக்கிறது.

நம் உடல் ஆரோக்கியமாக இயங்க போதுமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு கிராமில் (g/dl) கணக்கிடப்படுகிறது. ஒரு சராசரி ஆணிற்கு ஹீமோகுளோபின் 14-18 g/dl அளவு இருக்க வேண்டும். அதேபோல் ஒரு சராசரி பெண்ணிற்கு 12-16 g/dl அளவு இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்து ஹீமோகுளோபின் குறைந்தால் இரத்தசோகை நோய் ஏற்படும்.

நம் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவதற்கான முக்கிய காரணங்கள் என்ன. குறைபாடு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன, ஹீமோகுளோபினை அதிகரிக்க எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இனிக் காண்போம்.

எல்லா சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைவதற்கு முக்கியமான காரணம் ஆகும். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதும் ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கு வழி வகுக்கும். ஹீமோகுளோபின் அளவு உடம்பில் குறைந்துவிட்டால், நெஞ்செரிச்சல், தலைவலி, மயக்கம், உடல் சோர்வு, உடல் பலமின்மை போன்ற அறிகுறிகளை காட்டும்.

அப்படி ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிட்டால் அதை அதிகரிக்க இயற்கையான உணவுகளை உட்கொண்டாலே போதுமானதாக இருக்கும். இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை, புதினா கீரை, பொன்னகன்னி கீரை, சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட் , மாதுளை பழம், அத்தி பலம், ப்ரோக்கோலி ஆகியவற்றை அன்றாடம் உணவில் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அதிகரித்து புது ரத்தம் ஊரும்.