வெள்ளிப்பொருட்கள் எப்பவும் புதுசுபோல் இருக்கனுமா?!

By Staff

Published:

b633ec9165191ca8d0096abfd6cf2807

கி.மு. 3500லிருந்து வெள்ளியில் ஆன ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பூஜைக்குரிய பொருட்கள் என பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆயிரக்கணக்கில் பணம் போட்டு, பார்த்து பார்த்து வாங்கும் இந்த வெள்ளிப்பொருட்கள் சில நாட்களில் கறுத்து போய்விடும். அப்படி கறுக்காமல் இருக்கவும், கறுத்த வெள்ளிப்பொருட்களை மீண்டும் புதுசு போல் ஜொலிக்க வைக்கவும் என்ன செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்!!

வெள்ளி பொருட்களை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப் பெட்டியில் அல்லது நகைப் பெட்டியில் வைத்தால், எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும். வெள்ளி பொருட்கள் கறுக்காமல் இருக்க சிறிது கற்பூரத்தைப் போட்டு வைக்கலாம். பயன்படுத்தாத வெள்ளிப்பொருட்களை அதற்குண்டான ரோஸ் நிற பேப்பரில் சுற்றி காற்று புகாமல் அதற்குரிய டப்பாக்களில் போட்டு வைக்கனும்..

b057820c0f5fab74f7f2197ad55c302b

தினமும் பயன்படுத்தும் வெள்ளிப்பொருட்களும், எத்தனை பாதுகாத்தும் பயன்படுத்தாத வெள்ளிப்பொருட்கள் கறுத்து பொலிவிழந்து போனப்பின் அதை புதுசுப்போல பளப்பளக்க என்ன செய்யலாம்ன்னு இனி பார்க்கலாம்!!

பாத்திரம் மூழ்குமளவுக்கு தண்ணீரில், சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் பாத்திரத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்பு சுத்தம் செய்தால், வெள்ளி நகைகள் பளபளக்கும்.

பல் தேய்க்க பயன்படும் பற்பசையை பாத்திரத்தின்மீது தடவி சிறிது நேரம் கழித்து தேய்த்து கழுவினால் பாத்திரம் புதுசுப்போல் பளப்பளக்கும்.

bd6ce9c4688ae4cbe781e9fde69827f1

வெள்ளி பாத்திரங்கள் மூழ்குமளவுக்கு தண்ணீரை ஊற்றி அதில் பேக்கிங்க் சோடாவை சேர்த்து கொதிக்கவிடனும். தண்ணீர் கொதிக்கும்போது அலுமினியம் பாயில் பேப்பரை துண்டு துண்டாய் வெட்டி அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவேண்டும், அலுமினியம் பாயில் பேப்பர் வெள்ளிப்பொருட்களின்மீது படவேண்டும் அதுவே முக்கியம். 5 நிமிடத்தின் முடிவில் பாத்திரம் பளிச் பளிச்சென மின்னும்.

Leave a Comment