வாஸ்கோடமா என்னும் போர்ச்சுகீசிய மாலுமி முதன் முதல் வெளிநாட்டவராக கடல் கடந்து வந்து வணிகம் செய்ய அனுமதி பெற்றார், இவர் முதன் முதலாக நுழைந்தது, கொச்சின் அருகே உள்ள கோழிக்கூடு என்னும் இடத்தில்தான்.
அவர் கேரளாவின் சில இடங்களில் வாணிகம் செய்ய அனுமதி பெற்றதுடன், கடல் கடந்த வாணிகம் அடுத்த கட்டத்தை அடையும் வகையில் டச்சுக்காரர்கள், டேனியர்கள் என ஒவ்வொருவராய் அவர்களின் வணிக தளத்தை இந்தியாவில் அமைத்தனர்.
ஆனால் அவர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கவில்லை, ஆனால் கடைசியாக உள்ளே வந்தாலும், இந்தியாவை முழுமையாக ஆக்ரமித்தது ஆங்கிலேய ஆட்சிதான்.
1600ல் உள்புகுந்த நிறுவனம்தான் கிழக்கிந்திய கம்பெனி. இந்தியாவின் வளத்தினைக் கைப்பற்றக் கருதி, இந்தியர்களுக்குள் பிளவை ஏற்படுத்தியுடன், அந்த வாய்ப்பினை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
சிறிது சிறிதாக துவங்கி முழு இந்தியாவையும் கைக்குள் கொண்டு வந்தது, பேராசையின் உச்சத்தில் இந்தியர்களை அடிமைப்படுத்தியது.
பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா பல போராட்டங்கள் மூலம் சுதந்திரத்தைப் பெற்றது. இந்தியாவின் சுதந்திர தின தேதியை முடிவு செய்தவர் மெளன்ட் பேட்டன் பிரபு அவர்கள்தான். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிதான் 2ம் உலகப் போரில், ஜப்பான், அமெ ஐக்கிய படையிடம் பணிந்தது. இதை நினைவில் கொண்டுதான் இதே ஆகஸ்ட் 15ம் தேதி மெளன்ட் பேட்டன் இந்தியாவின் சுதந்திர தினமாக தேர்ந்தெடுத்தார்.