ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான் இவரே ஆசிரியர் தினம் என்றால் உடனடியாக அனைவருக்கும் ஞாபகம் வருபவர்.
இன்று இவ்வளவு அரசுப்பள்ளிகளும் ஆசிரியர்களும் உருவாக காரணமானவர் முன்னாள் முதல்வர் காமராஜர் அய்யா அவர்கள்.
விருதுநகரில் பிறந்து பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் படிக்கவில்லை என்ற மனவருத்தத்தில் தமிழ்நாடெங்கும் அதிக பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார்.
அந்த பள்ளிக்கூடங்கள் பல இன்று ஆலமர விருட்சமாக வளர்ந்து பல ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறது.
அதனால் ஆசிரியர் தினத்தன்று நாம் முன்னாள் முதலமைச்சர் பெருமை மிகு காமராஜர் அய்யா அவர்களையும் நினைவு கூறுவோம்.
ஏனென்றால் அவர் ஆட்சிக்காலத்தில் இவ்வளவு பள்ளிக்கூடங்கள் கொண்டு வரவில்லை என்றால் இன்று ஆசிரியர்களும் இல்லை மாணவர்களும் இல்லை என்பதே உண்மை.