மீண்டும் வங்கிகள் இணைக்கப்படுகிறதா? உங்கள் வங்கி வேறொரு வங்கியுடன் இணைக்கப்பட்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன? லாக்கர் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வ் ஏண்டும்? வங்கிகள் இணைக்கப்படுவது ஏன்?

சர்வதேச அளவில் போட்டியிட தகுதியான, சக்தி வாய்ந்த வங்கிகளை உருவாக்கும் நோக்குடன் வங்கித்துறையில் புதியதொரு மறுசீரமைப்பு பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகளின் தலைமை…

Bank

சர்வதேச அளவில் போட்டியிட தகுதியான, சக்தி வாய்ந்த வங்கிகளை உருவாக்கும் நோக்குடன் வங்கித்துறையில் புதியதொரு மறுசீரமைப்பு பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகள், பொதுத் துறை வங்கிகளை மீண்டும் ஒருமுறை ஒருங்கிணைத்து, பெரிய நிதி நிறுவனங்களாக மாற்றும் நகர்வுக்கு தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு பின்னால் தெளிவான காரணங்கள் உள்ளன. இதன் முதன்மை இலக்கு, உலக அரங்கில் தங்கள் முத்திரையை பதிக்கக்கூடிய உலகத் தர வங்கிகளை’ உருவாக்குவதாகும். பல சிறிய வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், அவை அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, மேம்பட்ட வங்கி தொழில்நுட்பத்தை நிலைநிறுத்த முடியும். மேலும், இந்த ஒன்றிணைந்த உலகளாவிய நிதிச்சந்தையில் பெரிய அளவில் போட்டியிடவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் முடியும்.

இந்திய வங்கித் துறை இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு பெரும் சீரமைப்பை கண்டுள்ளது. 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட மெகா இணைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, சிண்டிகேட் வங்கி, கார்பரேஷன் வங்கி போன்ற பல நிறுவனங்கள் கனரா வங்கி போன்ற பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக, நாட்டில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை சுமார் 12 ஆக குறைந்தது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில முக்கிய நிறுவனங்கள் மட்டுமே வலிமையான தூண்களாக எஞ்சியுள்ளன.

இந்த இணைப்பு இலக்குகள் வெறும் கட்டமைப்பு மாற்றங்களை கடந்து, நீண்ட கால நிர்வாக மற்றும் நிதி நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த ஒருங்கிணைந்த நிறுவனங்களின் முக்கிய நோக்கம், அதிக அளவில் அந்நிய முதலீட்டை பெறுவதுடன், தனியார் துறை நிறுவனங்களான HDFC போன்ற வெற்றிகரமான நிறுவனங்களின் சிறந்த நிர்வாக திறன்களையும், தொழில்நுட்ப உத்திகளையும் பொதுத்துறை வங்கிகளுக்குள் கொண்டு வருவதுமாகும். இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டுத்திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஒட்டுமொத்த நீண்ட கால செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.

இறுதியாக, வங்கிகள் இணைப்பு குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானாலும், வாடிக்கையாளர்கள் உடனடியாக சில அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மாறும் வங்கி எண், IFSC குறியீடு போன்ற புதிய கணக்கு விவரங்களை அனைத்து ஆவணங்களிலும், பரிவர்த்தனைகளிலும் புதுப்பிக்க வேண்டும். மேலும், லாக்கர் வைத்திருப்பவர்கள் அதன் விவரங்களை புதுப்பிப்பதோடு, வங்கி அனுப்பும் எந்தவொரு அறிவிப்பையும் புறக்கணிக்காமல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளித்து, தங்கள் கணக்குகள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.