மோசடி புகாரில் சிக்கிய நிராவ் மோடியை பற்றிய தற்போதைய தகவல்

வைர நகைக்கடையாளர் நிரவ் மோடி அமெரிக்க நாட்டில் இருப்பதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளது. ஆனால் அவற்றை உறுதி செய்ய முடியவில்லை என அரசுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோடி மீது கருத்து தெரிவிக்க நீதித்துறை மறுத்துவிட்டது. நிரவ் மோடி, அவரது மாமா மெஹுல் சோக்ஸி மற்றும் பலர் விசாரணை செய்யப்பட உள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி நடைபெற்றதையடுத்து அவ்வங்கியின் பணப்பரிமாற்றங்களை தீவிரமாக ஆய்வு செய்ததில், மேலும் ரூ.1,300 கோடி மோசடி நடந்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. நீரவ் மோடியின் உறவினரான மெஹுல் சோக்ஸி மற்றும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். Fort பகுதியில் உள்ள பிராடி ஹவுஸ் கிளை அலுவலகத்திலிருந்து வெளிநாட்டு கடன் பெறும் மோசடியில் அவர்கள் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

பல கோடி மோசடி நிகழ்வு இந்த நாட்டையே உலுக்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களின் மீதும் மத்திய அரசின் நிதியமைச்சகம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

இதற்கு முன்னால் விஜய் மல்லையா விசயத்தில் இந்த அரசாங்கம் காட்டிய மெத்தனப்போக்கு நிராவ் மோடி விசயத்திலும் நடக்கும் என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.