சென்னை மக்களே கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தயாரா? வரப்போகுது செம்பொழில் கிராமத்து திருவிழா

By John A

Published:

தினமும் இயந்திரமாய் ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மக்களுக்கு ஆறுதலுக்கு கிராமத்துப் பக்கம் வர வேண்டும் என்றால் குறைந்தது 50 கி.மீ தள்ளி இருக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களுக்குள் தான் வர வேண்டும். பெரிய பெரிய அபார்ட்மெண்டுகளையும், மேம்பாலங்களையும், ஷாப்பிங் மால்களையும், வாகனச் சத்தங்களிலும், போக்குவரத்து நெரிசல்களிலும் தினசரி தங்களது அன்றாட வாழ்க்கையைக் கடந்து செல்லும் சென்னை மக்கள் மனதிற்கு இதமாக வயல்வெளிகளிலும், நீரோடைகளிலும், ஊர் மக்களுடனும், தமிழ் கலாச்சாரத்துடனும் இருக்க வேண்டும் என்றால் சொந்த ஊர்களுக்குத் தான் வர வேண்டும்.

ஆனால் ஒருமுறை சொந்த ஊர் வந்து செல்லும் செலவை நினைக்கும் போது தலையே சுற்றும். ஒரு பக்கம் செலவு. மற்றொரு பக்கம் நிரம்பி வழியும் கூட்டம். இப்படி சொந்த ஊர் சென்றால் கூட நிம்மதியாகப் போக முடியாத சூழ்நிலையில் தற்போது கிராமமே சென்னைக்கு வரப் போகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா.

இரண்டே வருசத்துல 114 கிலோ குறைச்சாச்சு.. ரசிகர்களை ஏமாற்றி பிரபல யூடியூபர் செஞ்ச வேலை..

ஆம்..! சென்னை மக்களை மகிழ்விக்க செம்பொழில் என்ற அமைப்பானது ஓர் கிராமத்து திருவிழாவினை நடத்த உள்ளது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டு கிராமத்து அடையாளங்களான உணவு, பாரம்பரிய அசைவ சமையல் திருவிழா, தமிழர் கலைகள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கிராமத்து கலாச்சாரம் என அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் வருகிற செம்டம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்களும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த கிராமத்துத் திருவிழாவானது நடைபெற உள்ளது.

தினமும் பம்பரமாய் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், சொந்த ஊரை மிஸ் பண்ணுகிறோமே என்று ஏங்கும் மற்ற ஊர் மக்களுக்கும் ஓர் வரப்பிரசாதமாக இந்த சென்னை செம்பொழில் கிராமத்து திருவிழாவானது நடைபெற உள்ளது. இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் கார்த்தி கிராமத்து பாரம்பரிய உடையுடன், அசைவ உணவுகளை உண்பது போலவும், அதன்பின் சென்னை கிராமத்து திருவிழாவினை வரவேற்கும் வகையிலும் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. என்ன சென்னை மக்களே சென்னையில் ஓர் கிராமம் பார்க்க தயாரா..!