நீரின்றி அமையாது உலகம். அந்த நீரினை வழங்குவது மழை. மழைக்கு தலைவன் இந்திரன். தன்னால்தான் உலகம் இயங்குதுன்னு கர்வம் கொண்டான். இதையறிந்த கிருஷ்ணர், ஆயர்குல மக்களை அழைத்து இனி இந்திரனை வணங்கவேண்டாமென கட்டளையிட்டார். அதன்படியே ஆயர்குல மக்களும் இந்திரனை வழிபடுவதை நிறுத்திக்கொண்டனர்.
இதனையறிந்த இந்திரன் கடுங்கோபங்கொண்டு கோகுலத்தை மூழ்கடிக்கும் விதமாய் கடும்மழையை பொழிவித்தான். மூன்று நாட்கள் தொடர்ந்த மழையால் மக்கள் மட்டுமில்லாம ஆடுமாடுகள், முதற்கொண்டு புல்பூண்டு வரை பாதிக்கப்பட்டது. இந்திரனின் கோவத்தை உணர்ந்த கிருஷ்ணர். தன் சுண்டுவிரலால் மலையை தூக்கி, மழையை கோகுலத்தின்மீது வீழாமல் காப்பாத்தினான்.
தன் தவற்றை உணர்ந்த இந்திரன் கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்க, இந்திரனுக்கு வருடத்தின் ஒருநாள் விழா எடுப்பதாக ஆயர்குல மக்கள் சார்பாய் கிருஷ்ணர் வாக்களித்தார். இதுவே பொங்கல் பண்டிகையின் பிள்ளையார் சுழி.
அனைவருக்கும் பொங்கல்தின நல்வாழ்த்துகள்!!