Pan 2.0 சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஓட்டர் ஐடி PAN கார்டு மிகவும் முக்கியமானது. அதுவும் வரி செலுத்துபவர்களுக்கு PAN கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு Proof ஆகும். தற்போது இந்த PAN…

PAN

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் ஓட்டர் ஐடி PAN கார்டு மிகவும் முக்கியமானது. அதுவும் வரி செலுத்துபவர்களுக்கு PAN கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒரு Proof ஆகும். தற்போது இந்த PAN அட்டையில் மத்திய அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அதுதான் PAN 2.0 ஆகும். இதில் என்ன மாற்றங்கள் வருகிறது என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கிறது என்பதைப் பற்றி இனிக் காண்போம்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் PAN கார்டு இனி மேம்படுத்தப்பட்ட PAN 2.0 ஆக புதிய அம்சத்துடன் வரும் என்று அறிவித்தார். இந்த PAN 2.0 ஆனது புதிய வடிவத்திலும் மற்றும் விரைவான ஸ்கேல்களுக்கான QR குறியீட்டுடன் வரும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த PAN 2.0 பயனர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் விதமாக தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புடன் வருகிறது. குறிப்பிட்ட துறைகளில் வணிகம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு PAN 2.0 ஒருங்கிணைப்பு மற்றும் PAN 2.0 தொடர்பான சேவைகளுக்கு ஒரே தளம் ஒரே போர்டல் வர இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் பயனர் தரவின் Privacy க்கான வலுவான பாதுகாப்பு உடன் PAN 2.0 டேட்டாவை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பான சேமிப்பு அமைப்புகளை கட்டாயமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. பயனர்கள் PAN 2.0 விற்கு புதிய அட்டைகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு சார்ந்த மையங்களில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். PAN 2.0 எப்போது நடைமுறைக்கும் வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.