திருக்குறள் பற்றிய யாரும் அறியாத உண்மை! பிரமிக்க வைக்கும் தகவல்!

By Velmurugan

Published:

தமிழ் மிக முக்கியமான நூல்களில் ஒன்று திருக்குறள். இதை பற்றி அறியாதோர் யாருமே இல்லை. இது உலகம் முழுவதும் அனைவருக்கும் நமது தமிழ் மொழியின் பெருமையை கொண்டு சேர்த்து விட்டது. இதை எழுதியவர் திருவள்ளுவர்.

thirukuralஇவரின் நினைவாகத்தான் கன்னியாகுமரியில் இவரது சிலையை 133 அடியில் நிறுவி அரசு பெருமைப்படுத்தியது. இதனை பற்றிய யாருக்கும் தெரியாத பல அறியப்படாத உண்மை தகவல்கள் உள்ளது.

திருக்குறளில் அகர முதல என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது. இதில் ஆதிபகவன் என்பது கடவுளை குறிக்கிறது. திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் 133. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 மற்றும் திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம் குவளை திருக்குறளில் இடம்பெறும். திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல். திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை மூங்கில். திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓரெழுத்து நீ. திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் ளீ,ங திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.