உங்கள் மொபைல் பேட்டரியின் ஆயுள்காலத்தை நீட்டிக்க விரும்பினால் பேட்டரி அளவை எப்போதும் பூஜ்யத்திற்கு கொண்டு செல்லாதீர்கள். குறைந்தபட்சம் 40 சதவிகித பேட்டரி சக்தியுடன் மொபைலை வைத்திட முயற்சிக்கவும். லித்தியம்-ஐயன் பேட்டரிகள் அவை பயன்பாட்டில் இல்லாத சமயத்தில் எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் அவை பயன்பாட்டில் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல் பத்து சதவிகித சக்தியை இழக்கிறது.
லித்தியம்-அயன் பேட்டரி சக்தி மிகக் குறைவாக இருக்கும் போது, அதாவது அவை பூஜ்யம் சதவிகிதத்தில் இருக்கும்போது உண்மையில் அவை நிலையற்றவை, மற்றும் அவற்றை பூஜ்யத்திலிருந்து சார்ஜ் செய்யும்போது மிகவும் ஆபத்தானவை. நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு பேட்டரியை சார்ஜ் இல்லாமல் வைக்கும்போது பேட்டரியைச் சுற்றி அமிலம் வெளியேர வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் மறுபடியும் சார்ஜ் செய்யும் போது பேட்டரி வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் தற்போது வருகின்ற பேட்டரிகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை. எனினும், வாங்கும் போது தரமான பேட்டரிகள் வாங்குவது மிகச் சிறந்தது. மேலும் அதிகமாக சார்ஜ் செய்தாலும் பேட்டரி வெடிப்பதற்கோ அல்லது மின் சக்தியை சேகரிக்கும் திறனை இழப்பதற்கோ வாய்ப்புள்ளது. தேவை என்றால் மட்டுமே சார்ஜ் செய்யவும்.