மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!

By Staff

Published:


c9eb7e54bff5676f6e75ce086a16b5a8-1

எதுவுமே தற்செயலாய் நடப்பதில்லை.. எல்லாமே ‘தன்’செயலால்தான் நடக்கின்றது. பிதாகரஸ் விதிப்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குண்டான எதிரிவினை கண்டிப்பா நடக்கும். வைரம்கூட பட்டை தீட்ட தீட்டதான் ஜொலிக்கும். அதுமாதிரிதான் மனிதனும், தனது தீய குணங்களை விட்டொழித்து மனசாட்சிக்கும் தெய்வத்துக்கும் பயந்து நடந்தாலே போதும். சிறந்ததொரு மனிதனாய் வாழ்வை வெற்றிக்கொள்ளலாம்..

சரி, ஒரு மனிதன் விட்டொழிக்க வேண்டிய 21 தீய குணங்கள் எவைன்னு பார்க்கலாமா?!
1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர்போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல் 21.மண், பொன், பெண், புகழ்மீதான பேராசை என இந்த 21தீய குணங்களை விட்டொழித்தாலே மனிதன் தெய்வமாகலாம்

Leave a Comment