இனி நிலவில் கூட வீடியோ கால் பேசலாம்!

By Staff

Published:

இந்த மனித இனம் 4ஜி வயர்லெஸ் நெட்வொர்க்குக்கின் மூலமாக தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த இலக்கை எட்டியுள்ளது.

வோடபோன் ஜெர்மனி மற்றும் நோக்கியா இவை இரண்டும் சேர்ந்து  நிலவில் முதல் 4G நெட்வொர்க்கினை உருவாக்க உறுதிப்பூண்டுள்ளனர். இதன் மூலமாக இந்த 4G நெட்வொர்க் நேரடியாக 2019 வாக்கில் நிலவை சென்றடையும்.

தகவல் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜெர்மனியில் உள்ள தனியார் விண்வெளி நிறுவனமான PTScientists க்கு நிதியுதவி அளித்து வருகிறார்கள். இதன்மூலம் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிலவில் இந்த தகவல் தொழில் நுட்பம் உருவாக உள்ளது.

சூரிய குடும்பத்தின் நிலையான ஆராய்ச்சிக்கு இது தனித்துவமான முதல் முயற்சியாகும், PTScientists -யின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ராபர்ட் போம்மே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்ற்றால், ” இந்த பூமி தொட்டிலில் இருந்து மனிதகுலத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல, நம் சொந்த வீடான பூமிக்கு அப்பால் நம் தகவல் தொழில் நுட்ப கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.” என்பதே.

இந்த  நெட்வொர்க்கானது இரண்டு “ஆடி லூனார் குவாட்ரோ ரோவர்ஸ்”ஐ ஒரு வானூர்தி நிலையத்தில் இணைக்கிறது. இதன் மூலம் 1972 ஆம் ஆண்டுடைய அப்பல்லோ திட்டப் பணியின் இறுதியில், லூனார் ரோவிங் வாகனத்தை அணுகும் போது, ​​4G சேவையானது தரவு மற்றும் HD வீடியோவை பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும்.

இந்த திட்டத்தில் வோடபோனுடன் நோக்கியாயும் இணைந்து, விண்வெளியில் ஒரு சர்க்கரை மூட்டையின் அளவிலான எடையில் Space-grade நெட்வொர்க்கினை உருவாக்கும்.

இந்த திட்டமானது அடுத்த ஆண்டு கேப் கனவெரலிருந்து (Cape Canaveral) ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கோன் 9 ராக்கெட் (SpaceX Falcon 9 rocket) மூலமாக ஆரம்பிக்கப்பட உள்ளது.

​​PTScientists மற்றும் NASA போன்ற நிறுவனங்கள் நிலவை பற்றிய எண்ணத்தை எதிர்காலத்தை நோக்கி கூட்டிச் செல்கின்றன.

Leave a Comment