நடிகர் திலகம் சிவாஜிகணேசனை உலகமே அறியும். அதேபோல் திரைத்துறையில் இயக்குநர் திலகம் என்று போற்றப்பட்ட இயக்குநர்தான் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இயக்குநர் சிகரம் பராதிராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா போன்ற அடைமொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் தான் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வழக்கம் போல் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் சில இயக்குநர்களிடம் உதவியாளராகவும், வசனகார்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றினார். சிவாஜி இரட்டைவேடங்களில் கலக்கிய உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற உன்னழகைக் கன்னியர்கள் கண்ட பின்னாலே..போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை எழுதினார். இதனையடுத்து சினிமாத்துறையில் போதிய பயிற்சி பெற அடுத்த என்ன இயக்கம் தான். 1962-ல் முதன் முதலாக சாரதா என்ற படத்தினை இயக்கினார் கே.எஸ்.ஜி.
பெண்ணியம் பேசிய படங்கள்
முதல்படமே வித்தியாசமான கதை. அதுவும் பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படம். கண்ணதாசன் வரிகளில் பாடல்கள் வழக்கம் போல் ஹிட் ஆக படமும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து சித்தி, செல்வம், கைகொடுத்த தெய்வம், பேசும் தெய்வம், தெய்வத்தின் தெய்வம், குறத்தி மகன், என்னதான் முடிவு, கற்பகம், பேர்சொல்லும் பிள்ளை, படிக்காத பண்ணையார், ஆயிரம் ரூபாய் போன்ற பல படங்களை இயக்கினார்.
சூர்யா, சிவாவுக்கு எதிர்பார்த்த ஓப்பனிங்கை கொடுத்ததா கங்குவா..? வெளியான முதல் விமர்சனங்கள்
இதில் சாரதா திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது. பெரும்பாலும் கே.எஸ்.ஜி. படங்களில் பெண்ணியக் கருத்துக்கள் அதிகம் இருக்கும். மேலும் அதிக வசனங்கள் இவரது படத்தில் இருப்பதால் ஒருவித நாடகத்தன்மை வெளிப்படும். எனினும் அந்த தனி பாணியே இவரைக் கவனிக்க வைத்தது. தொடர்ந்து கே.ஆர்.விஜயாவுக்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கே.ஆர்.விஜயாவிற்கு முதல்படமான கற்பகம், 100-வது படமான நத்தையில் முத்து, 200-வது படமான படிக்காத பண்ணையார் ஆகியவற்றை இயக்கியது சிறப்பு.
கே.எஸ்.ஜி படங்களில் கமர்ஷியலுக்கு இடமே இல்லை. தேவைக்கேற்ற பாடல், காமெடி போன்றவை இருக்கும். படம் ஆரம்பித்ததுமே கதைக்குள் நுழைந்து ரசிகர்களை கட்டிப் போட்டு விடுவார். பிற்காலத்தில் பெண்ணியம் பேசிய கே. பாலச்சந்தர் படங்களுக்கு முன்னோடியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களே திரையில் பெண்களை உயர்த்திக் காட்டியது. இதனால் தான் இவர் இயக்குநர் திலகம் என திரைத்துறையில் அழைக்கப்படுகிறார்.