காஞ்சி பெரியவர் சொன்ன வெற்றிலையின் ரகசியம் இதுதானா?!

By Staff

Published:

சாமி கும்பிடும்போதும், சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை கட்டாயம் இடம்பெறும். இதுக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்குவோம்.

கோவிலிலும், சுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை இடம்பெற காரணம்…

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாய் ஐதீகம். இறைவனுக்கு எத்தனை உயர்ந்த பண்டங்கள், பழங்களை நைவேத்தியம் செய்தாலும், வெற்றிலை பாக்கு இல்லாவிட்டால் அந்த பூஜை முற்றுப் பெறுவதில்லை. பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையோடு , பாக்கும் சேர்வது விஷ்ணு – மகாலட்சுமியின் சேர்க்கையாகும்.

அசுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை இடம்பெற காரணம், பதினாறாம் நாள் காரியம் நடைப்பெறாமல், தான் இருந்த வீட்டையே அந்த ஆத்மா சுற்றி சுற்றி வருமாம். அந்த தீய ஆத்மாக்களினால் அங்கிருப்பவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாம இருக்கவே வெற்றிலை பயன்படுது. அதில்லாம அங்கிருக்கும் துக்கம், மாதிரியான எதிர்மறையான எண்ணங்களால் அங்கிருக்கும் உணவுப்பண்டம் சீக்கிரம் கெட்டுப்போகாமலும், அந்த உணவுப்பண்டத்தினால் யாதொரு தீங்கும் விருந்தாளிகளுக்கு ஏற்படக்கூடாதுன்னுதான் கெட்ட நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை, பாக்கு வைக்கப்படுது.

வெற்றிலை பெயர்காரணம்….

எல்லா செடியும் துளிர்த்து இலையாகி, மொட்டாகி, பூத்து, காய்த்து கனியும். அந்த செடிக்கேற்ப இலை, காய், கனின்னு அடுத்தவங்க பசியாற பயன்படும். ஆனால், வெற்றிலை கொடியில் மட்டும் இலை மட்டுமே உருவாகும். பூவோ, காயோ, கனியோ உண்டாகாது. இப்படி ஒரே ஒரு உருவமெடுத்தாலும் அது இறைவனையே சேரும். இறைவனை சேராவிட்டாலும் எல்லாவிதத்திலும் அடுத்தவருக்கு பயனுள்ளதா இருக்கும். அதுமாதிரி மனிதப்பிறவியான நாமும் இறைவனுக்கு நம்மை அர்ப்பணிக்கனும். அல்லது மக்களுக்கு பயனுள்ளதா இருக்கனும். இதை நான் சொல்லலீங்க. காஞ்சி பெரியவர் சொல்லி இருக்கார்.

Leave a Comment