270ம் ஆண்டில் ரோமப்பேரரசை (Roman Empire) ஆண்டு வந்த அரசன், தனது போர்வீரர்கள் திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், போரின்போது குடும்பத்துக்காக சரிவர போரிடமாட்டார்கள் என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் பண்ணிக்க விடலை. ஆனால், பிஷப் வேலன்டைன் (Bishop Valentine) என்பவர் அரசனின் ஆணைக்கெதிராக திருட்டுத்தனமாக பல போர்வீரர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். இந்த நடவடிக்கை அரசனுக்குத் தெரியவந்ததும், வேலன்டைன் சிறையில் அடைக்கப்பட்டு அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும், சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் எவ்வளவோ முயன்றாள். இதை அறிந்த சிறைத்தலைவன் தன் மகளை வீட்டுச்சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள் சிதைந்தது. உருக்குலைந்து போனாள் அஸ்டோரியஸ். அஸ்டோரியஸக்கு அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று செய்தி சுமந்து வந்தது.
விழி இருந்தும்
வழி இல்லாமல்
மன்னன் பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து பார்க்க வழி இழந்து,
நீ மன வலி தாங்காது
கதறும் ஒலி கேட்டும்,
உனை மீட்க வழி தெரியாமல் மக்களுக்காக பலியாடாய் போகிறேன்;
நீ ஒளியாய் வாழு!
பிறருக்கு வழியாய் இரு!!
சந்தோஷ ஒளி உன் கண்களில்மிளிறும்!! -உன்னுடைய வாலண்டைனிடமிருந்து („From your Valentine“) என எழுதி தன் காதலிக்கு அனுப்பி வைத்த மறுநாள் February 14ம் தேதி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றி கொல்லப்பட்டார் அவர் இறந்த நாளில் காதலர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தனர். „From your Valentine“ என்கிற வசனத்தை, காதலர்கள் தங்கள் கடிதங்களில் பயன்படுத்த ஆரம்பிக்க, அதுவே காதலர்தின தினத்தின் முதல் வாழ்த்து அட்டையின் வாசகமானது.