சிறுகோள் அல்லது Asteroid என்பது சூரிய குடும்பத்தின் உட்புற பகுதியில் சூரியனை சுற்றிவரும் சரியான வடிவமைப்பை கொண்டிராத சிறிய கோள்களாகும். இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையே உள்ள வட்டப்பாதையில் பெரும்பாலும் சுற்றி வருகின்றன.
சிறுகோள்களை விண்கற்கள் என்றும் சொல்வதுண்டு. இந்த சிறுகோள்கள் சூரியனை சுற்றி வருகையில் பூமியின் வளிமண்டலத்தில் புகுந்து விடுவதும் உண்டு. இவை புவியின் வளிமண்டத்தில் நுழைந்த பிறகு காற்றில் உராய்ந்து எரிந்து விடும். சில விண்கற்கள் பூமியின் தரைப்பகுதியில் வந்து விழுவதும் உண்டு.
உலகத்தின் பல இடங்களில் விண்கற்கள் விழுந்த தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இவை யார்க்கும் தீங்கு செய்யா வண்ணம் உடைந்திருக்கும். ஆனால் தற்போது ஒரு புதிய மிகப்பெரிய சிறுகோளை கண்டுபிடித்திருக்கின்றனர்.
இந்த சிறுகோளுக்கு ‘அபொபிஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த மிகப்பெரிய அபொபிஸ் சிறுகோள் ஆனது வருகிற 2029 ஆம் ஆண்டு பூமியை தாக்கும் என்பது சாத்தியமான உண்மை என்று ISRO விங்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமிக்கு அருகில் ஒரு மாபெரும் சிறுகோள் ஏப்ரல் 13, 2029 மற்றும் மீண்டும் 2036 இல் கடந்து செல்ல உள்ளது. அபோபிஸ் என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் அந்த நேரத்தில் 370 மீட்டர் விட்டம் கொண்ட மிகவும் ஆபத்தானது என்று ISRO தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய அளவிலான இந்த சிறுகற்களால் பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படக் கூடும் எனவும், மனிதர்கள் இந்த பேராபத்தை சந்திக்க தங்களை தயார் செய்து கொல்வதோடு பூமியை காப்பாற்ற மாற்று வழிகளை கண்டுபிடித்து ஆகவேண்டும் என்று ISRO எச்சரித்துள்ளது.