சமீப காலமாக யூட்யூப் பேஸ்புக் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வீடியோக்களை பார்த்து நமக்கு பிடித்திருந்தால் லைக் செய்வதும் ஷேர் செய்வதையும் செய்து வருகிறோம்.
ஆனால் அந்த வீடியோக்களுக்கு லைக் செய்தால் பணம் தருவதாக கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பொறியாளர் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ள நிலையில் புனைவை சேர்ந்த ஸ்டீல் நிறுவன பொறியாளர் ஒருவர் 39 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்த மோசடி அரங்கேற்றப்படுவது எப்படி என கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனைவை சேர்ந்தவர் 39 வயது பொறியாளர், பொறியாளர் ஆன இவர் அங்குள்ள பிரபல ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த மாதம் 14ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தபோது அவரது மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் யூடியூப் பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் வரும் வீடியோக்களை லைக் செய்தால் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பகுதி நேரமாக இந்த வேலையை பார்க்கலாம் என்றும் இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை என்றும் நீங்கள் ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் நேரத்தைக் கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. அந்தக் கவர்ச்சி விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட அந்த பொறியாளர் கூடுதலாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் அவர்கள் கூறியபடி வீடியோக்களை லைக் செய்யும் வேலையை செய்துள்ளார்.
கடந்த மாதம் 15 ஆம் தேதி டெலிகிராம் ஆப் மூலம் அனுப்பிய லிங்குகளில் இருந்து 18 வீடியோக்களை லைக் செய்து விட்டு ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி உள்ளார், அதற்காக அவருக்கு 825 வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15ஆம் தேதி இவருக்கு மேலும் 18 வீடியோக்களின் லிங்குகளை அனுப்பி லைக் செய்யச் சொல்லி உள்ளன. இதற்கான பணத்தைப் பெற மெசஞ்சர் ஆப்பில் உள்ள ஒரு குழுவில் சேரச்சொல்லி உள்ளன .அந்த குழுவில் சேர்ந்தவுடன் லைக் செய்யும் வீடியோக்களை பெற முன் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர் .
ஏற்கனவே லைக் செய்த வீடியோவுக்கு பணம் வந்ததால் அவர்கள் கூறியபடி 16,800 அளித்து வீடியோக்களை பெற்று லைக் செய்திருக்கிறார் .இதற்காக அவருக்கு 27 ஆயிரத்து 650 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 17-ஆம் தேதி என்று ஆறு லட்சத்து 82,000 அதற்கு அடுத்த நாள் ஒன்பது லட்சம் ரூபாயையும் அனுப்பி வீடியோக்களை பெற்று விடிய விடிய லைக் செய்திருக்கிறார்.
ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிவிடவேண்டும் என்ற வேகத்தில் அவர் தீவிரமாக பணியாற்றியுள்ளார். அப்போது இவர் வீடியோக்களை லைக் செய்ய லைக் செய்ய பணம் வாலட்டில் ஏறிக்கொண்டே இருந்துள்ளது மொத்தமாக 40 லட்சம் ரூபாய் சேர்ந்து உள்ளது .
அந்த பணத்தை எடுக்க முயன்ற போது மேலும் 20 லட்சம் ரூபாயை அனுப்பி அதற்கான வீடியோக்களை லைக் செய்தால்தான் பணத்தை எடுக்க முடியும் எனக் கூறியுள்ளன, இதனால் ஏப்ரல் 19ஆம் தேதி மேலும் 20 லட்சம் ரூபாயை அனுப்பி விட்டு வீடியோக்களை லைக் செய்திருக்கிறார். அப்போதும் வாலட்டில் பணம் சேர்ந்து இருப்பதே தவிர அதை அவரால் எடுக்க முடியவில்லை.
சுந்தர் பிச்சையின் அதிர்ச்சி அறிவிப்பு.. உலகையே மாற்றியமைக்கும் வேற லெவல் அப்டேட்!
இதனால் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மேலும் 30 லட்சம் ரூபாய் செலுத்தி வீடியோக்களை லைக் செய்தால் மொத்த பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கின்றன. அப்போதுதான் அவர்களின் பொறியில் சிக்கிவிட்டது என அந்த பொறியாளருக்கு தெரியவந்துள்ளது.
இதற்கு மேல் தன்னிடம் பணம் இல்லை என்றும் வாலட்டில் உள்ள பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறும் அவர் கூறியுள்ள அதன் பிறகு அந்த கும்பல் குழுவை கலைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டது.
அதன் பிறகு புனே சைபர் கிரைம் போலீசில் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
யூட்யூப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு லைக் செய்தால் பணம் கொடுக்கப்படும் என்று மோசடி கும்பல் விரிக்கும் வலையில் பொதுமக்கள் யாரும் சிக்கி விட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.