Full Body Detox எவ்வளவு முக்கியமானது? எப்படி செய்வது? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்?

By Meena

Published:

Detox என்ற வார்த்தை சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் கொரோனா நோய் தொற்று மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் தான். அதற்குப் பிறகு மக்கள் தங்களது உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

ஆனாலும் இளைஞர்களிடையே பாஸ்ட் புட் கலாச்சாரமும் பிரபலமடைந்து கொண்டு தான் இருக்கிறது. பாஸ்ட் புட் நம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம். ஆனாலும் அந்த உணவுகளை இன்றைய காலகட்டத்தில் முற்றுலுமாக தவிர்த்து விடமும் முடியாது.

ஆனால் அதன் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. அது தான் Full Body Detox என்பதாகும். நமக்கே தெரியாமல் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் நம் உடலில் சேரும் ரசாயனங்கள், தேவையற்ற கழிவுகளை நீக்குவதே Detox என்பதாகும்.

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் உடம்பை detox செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பாரம்பரியமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றினார்கள். அவற்றில் மூலிகை கஷாயங்கள், மூலிகை ரசம், இஞ்சி சாறு, சுக்கு காபி, வேப்பிலை சாறு, நெல்லிக்காய் சாறு போன்றவைகள் அடங்கும்.

நம் உடம்பை detox செய்வதற்கான மூலிகை மாத்திரைகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இன்றைய Lifestyle இல் Full Body Detox என்பது அவசியமான ஒன்றாகும். Detox செய்துக் கொண்டால் நம் உடலின் உள்ளுறுப்புகளான கல்லீரல், கணையம், வயிறு, குடல், சிறுநீரகம் போன்றவைகள் பாதிப்படையாமல் தடுக்க முடியும். இந்த Full Body Detox ஐ மாதத்திற்கு ஒரு முறை செய்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியமாகும் வலிமையாகவும் இருக்கும்.

Tags: Detox