சென்னை மாநகரத்தின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் 2004-ம் ஆண்டு சசிநாயர், விண்சண்ட் டிசோஸா, முத்தையா போன்ற பத்திரிக்கையாளர்கள் துவக்கி வைத்தனர். அதிலிருந்துதான் இவ்வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
இப்போது சென்னை வாசிகள் மிகவும் ஆர்வமுடன் சென்னயின் பிறந்தநாளை கொண்டாடத் தொடங்கினர். முன்பு சென்னையின் பழைய புகைப்படங்களை கொண்டு பிறந்தநாளை கொண்டாடி வந்தனர்.
இப்போது தொழிற்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில் வாட்ஸ் அப்பில் தகவல்களை பறிமாறியும் ஸ்டேட்டஸில் சென்னையின் பெருமைகளை பாடல்களாகவும் கவிதை தொகுப்பாகவும் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி பேஸ் புக்கிலும் டுவீட்டர் பக்கத்திலும் மற்ற சமூக வளைதளங்களிலும் தங்களின் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து சென்னையின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
பல மக்களுக்கு ஆதரவளித்துள்ளது சிங்கார சென்னை. பல வெளிநாட்டவர்களையும் அரவணைத்து ஆதரவு தந்துள்ளது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்ற கூற்று அனைவரும் ஏற்கும் வகையில் சென்னை தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகிற்து.
இப்போது சென்னையின் பல இடங்களிலும் உணவுத்திருவிழா, புகைப்படக்காட்சி பல வித விதமான விளையாட்டு போட்டிகள், இசை விளையாட்டு என போட்டிகள் நடத்தி சிங்கார சென்னையின் 380-வது பிறந்தநாளை சென்னைவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி வருகின்றனர்.