சில இடங்களில் ஜாதி ரீதியாக கயிறு கட்டி வருவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது என பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் சென்றது. இதை கேட்ட பள்ளிகல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் மாணவர்கள் இனிமேல் யாரும் கையில் ஜாதி, மத அடையாளமாக கயிறு கட்ட கூடாது, நெற்றியில் திலகம் இடக்கூடாது என அந்த உத்தரவில் இருக்கிறது.
இதை கேள்விப்பட்ட சில பொதுமக்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்கோ நடந்த பிரச்சினைக்காக ஒட்டுமொத்த மாணவர்களுக்கு உத்தரவிடுவது சரியல்ல எனவும், திலகம் இடுவது, திருநீறு பூசுவது உள்ளிட்டவை சிலரின் வழக்கம் ஒட்டுமொத்தமாக இப்படி தடை செய்தது சரியல்ல என இந்த உத்தரவுக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர்.