ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ம் தேதியை தேசிய கல்வி தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? ஆம். சுதந்திர இந்தியாவின் நேரு தலைமையிலான முதல் மக்களாட்சியில் நாட்டின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றவர்தான் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இவரது பிறந்த தினத்தினையே தேசிய கல்வி தினமாகக் கொண்டாடி வருகிறோம்..
அப்படி என்ன செய்தார் அபுல் கலாம் ஆசாத்?
சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் 1888-ல் பிறந்தவர் தான். அபுல் கலாம் ஆசாத். இவரின் இயற்பெயர் சயீத் குலாம் முஹியுதீன் அகமது பின் கைருதீன் அல் ஹுசைனி, பின்னர் இந்தியில் அபுல் கலாம் ஆசாத் என பெயர் மாறியது. இவரது தந்தை முஸ்லீம் அறிஞர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த அபுல் கலாம் ஆசாத் டெல்லியில் தாய் வழி தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தார். பின்னர் இவரது குடும்பம் கல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது.
அங்கேயே வளர்ந்த அபுல் கலாம் ஆசாத் இளம் வயதிலேயே உருது, பெங்காலி, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளைக் கற்றத் தேர்ந்து இளம் வயதிலேயே கட்டுரைகள் எழுதுவதில் வல்லவராக விளங்கினார். 1905-ம் வங்கப்பிரிவினைப் பிரிவினைப் போராட்டத்தில் முதன் முதலாகக் கலந்து கொண்டவர் அதனைத் தொடர்ந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழுமூச்சுடன் இறங்கினார். கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார். இப்படி தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு இயக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அபுல் கலாம் ஆசாத்தை ஆங்கிலேயேர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். 4 ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பின் மீண்டும் மகாத்மா காந்தியுடன் இணைந்து அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல் என போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் காங்கிரஸிலும் இணைந்தார்.
டி-சர்ட்டில் இருந்த ஒரே வார்த்தை..மொத்த வயநாட்டு மக்களையும் கவர்ந்த ராகுல் காந்தி..
தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்த அபுல் கலாம் ஆசாத் 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நேருவின் தலைமையிலான முதல் மக்களாட்சியில் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் தான் கல்விக்காக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு வித்திட்டார். பல்கலைக் கழக மானியக்குழு அமைய அடித்தளம் அமைத்தார். மேலும் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, மருத்துவக் கல்லூரிகள் அமையப் பாடுபட்டார். மேலும் அனைவருக்கும் கல்வி என்பதில் குறிக்கோளாக இருந்து அதனைச் செயல்படுத்தினார்.
இவரின் சேவைக்கா இந்திய அரசின் உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும் புதுடெல்லியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.