இந்த விஷயம் தெரியாமப் போச்சே.. மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட் பெறும் சூப்பர் ஐடியாக்கள்..

மிடில் கிளாஸ் மக்களுக்கு விமானப் பயணம் என்பது வெறும் கனவு மட்டும் தான். ஆனால் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் செயல்பாட்டில் உள்ள UDAN திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களும்…

Flight Ticket Booking

மிடில் கிளாஸ் மக்களுக்கு விமானப் பயணம் என்பது வெறும் கனவு மட்டும் தான். ஆனால் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் செயல்பாட்டில் உள்ள UDAN திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களும் கூட விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.

மேலும் உள்நாட்டு, உள் மாநில நகரங்களையும் இத்திட்டம் விமானத்தின் மூலம் இணைக்கிறது. நீங்கள் அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்வீர்களானால் அல்லது விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பறக்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் இந்த ஐடியாக்களை ஃபாலோ பண்ணுங்க..

முன்பதிவு செய்யும் கிழமைகள்
விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஏற்ற நாட்கள் செவ்வாய் மற்றும் புதன் கிழமை ஆகும். ஏனெனில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களது விமானக் கட்டணத்தினை செவ்வாய் கிழமை மாலையே நிர்ணயம் செய்கிறது. மற்ற நாட்களில் புக் செய்யும் போது கட்டணம் பல மடங்கு கூட வாய்ப்புண்டு.

எத்தனை நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம்?
சிலர் தங்களது பயணத்திட்டத்தினை 6 மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு விமான டிக்கெட்டினை புக் செய்வார்கள். ஆனால் 21 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் முன்பதிவு செய்வதால் முதல் 20 பயணிகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைக் கட்டணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஏனெனில் விமான கட்டணங்களை நிர்ணயிக்கும் சாப்ட்வேர்கள் மலிவான டிக்கெட்டுகளுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டினைக் கொண்டுள்ளது. முதல் 20 டிக்கெட்டுகள் மலிவு விலை கொண்டதாகவும், அடுத்த 200 டிக்கெட்டுகள் நடுத்தர விலையிலும், மீதமுள்ளவை அதிக கட்டணமும் நிர்ணயம் செய்யும் வகையில் அமைந்திருக்கும்.

பிச்சைக்காரர்கள் இருக்காங்களா? உடனே சொல்லிட்டு ரூ.1000 வாங்கிட்டுப் போங்க.. ம.பி. அரசு அதிரடி

இந்த நாட்களில் பயணியுங்கள்..
ஏற்கனவே குறிப்பிட்டது போல செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு அடுத்து வரும் அதே கிழமைகளில் பயணிப்பது குறைவான பிஸியான நாட்களாகும். பெரும்பாலும் விமான நிலையங்கள்

சர்வதேச விமானத்தில் பறக்கிறீர்கள் என்றால் 11 முதல் 12 வாரங்களுக்கு முன்பாக சில சலுகைகளை வழங்கும். இந்தக் காலகட்டததில் டிக்கெட் விலையை தவறாமல் சரிபாருங்கள்.

தரையிறங்குவதில் உள்ள டிரிக்

நீங்கள் தரையிரங்கும் விமான நிலையம் முக்கியமான விமான நிலையம் என்றால் அதன் அருகில் உள்ள மற்றொரு சிறிய விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ரயில் அல்லது பேருந்து மூலம் செல்வதால் பல ஆயிரங்களை மிச்சப்படுத்தலாம்.

இணையதள குக்கீஸ்கள்
நீங்கள் பல நாட்களுக்கு முன்பு விமானத்தில் சென்றிருந்தீர்கள் என்றால் மீண்டும் புக் செய்யும் போது உங்கள் இணையதள ஹிஸ்டரியை அழிக்கவும். மேலும் குக்கீஸ்களையும் அழிக்கவும். ஏனெனில் இந்த குக்கீஸ்கள் நீங்கள் விமான நிறுவனத்தின் இணையதளத்தினை மீண்டும் பார்வையிட்டதாகக் கருதும். எனவே முன்பதிவு முறை ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் டிக்கெட் விலை அதிகரித்துக் காணப்படலாம். எனவே பிரௌசரில் குக்கீஸ்களை அழிக்கும் பட்சத்தில் விமான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம்.

விமான டிக்கெட்டுகள் முன்பதிவில் கட்டணத்தினை வேறு இணையதளங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏனெனில் மற்றொரு தளத்தில் விலை மாறுபாடு இருக்கும். விமான கட்டணம் மற்றும் முன்பதிவிற்கு இந்த இணையதளங்களை உபயோகமாக இருக்கும்.

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software
இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க.. இனி அந்த ஆகாய மார்க்க பயணமும் அத்துப்படியாகும்.