வலைதளம் எப்போது உருவானது என்று தெரியுமா?

By Staff

Published:

உட்கார்ந்த இடத்திலேயே உலகம் சுற்றி வரும் அதிஷ்டசாலியான தலைமுறை இது. கணினியில் இண்டர்நெட் இருந்தால் போதும் யாரும் அருகில் இல்லையே என்ற கவலை இருப்பது இல்லை. அப்படிப்பட்ட வரபிரசாதம் பற்றி எத்தனைப் பேருக்கு தெரியும்? இண்டர்நெட் கணினி உலகத்தின் மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

CERN இல் உள்ள பிரிட்டிஷ் விஞ்ஞானியான டிம் பெர்னர்ஸ்-லீ 1989 இல் உலகளாவிய வலை (www) கண்டுபிடித்தார். வேர்ல்ட் வைட் வெப் முதல் வலைத்தளம் பற்றிய திட்டத்தை டிம் பெர்னர்ஸ்-லீ, 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 6, 1991 அன்று பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினார். இந்த வலைத்தளமானது உலகம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இடையில் தானாக தகவல் பரிமாற்றத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

CERN இல் உள்ள உலகின் முதல் வலைத்தளம் உலகளாவிய வலைத் திட்டத்திற்காக முழுவதுமாக அர்ப்பணிக்கப்பட்டது மற்றும் அவை பெர்னெர்ஸ்-லீயின் NeXT கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டிருந்தது. பிறரின் ஆவணங்களை எவ்வாறு அணுகுவது மற்றும் எப்படி உங்கள் சொந்த சேவையகத்தை அமைப்பது போன்ற விவரங்கள் அந்த இணையதளத்தில் இருந்தன. NeXT இயந்திரம் மற்றும் அசல் வெப் சர்வர் ஆகியவை CERN இல் உள்ளது. முதல் வலைத்தளத்தை திரும்ப அமைப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, 2013 ஆம் ஆண்டில் முதல் வலைத்தளத்தை CERN அதன் அசல் முகவரிக்கு மறுகட்டமைத்தது. ஏப்ரல் 30, 1993 அன்று CERN பொது உலகளாவிய வலை மென்பொருளை பொது உரிமமாக உலகிற்கு அளித்தது.

Leave a Comment