இந்த குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வங்கியில் பண பரிவர்த்தனை செய்தால் வரி கட்ட வேண்டும் தெரியுமா?

By Meena

Published:

மக்கள் பணத்தை சேமிப்பது டெபாசிட் செய்வது ஆர்டி போடுவது என வங்கிகளில் தங்களது பணத்தை பத்திரப்படுத்துவார்கள். உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எப்போதும் வேண்டுமானாலும் தேவைக்கேற்ப மக்கள் எடுப்பதுண்டு. ஆனால் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் நீங்கள் பணத்தை வங்கியில் இருந்து பரிவர்த்தனை செய்யும்போது அதற்கு வரி கட்ட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகையை திரும்பப் பெற வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி இனி காண்போம்.

மக்கள் தங்கள் வங்கி கணக்கில் தங்களது பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாக எடுக்கலாம் என்று நினைக்கின்றார்கள். ஆனால் வருமான வரி சட்டத்தின் படி ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் அவர் டிடிஎஸ் செலுத்த வேண்டும். வங்கி, கூட்டுறவு வங்கி அல்லது தபால் நிலையங்கள் எங்கிருந்து ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தாலும் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.

இதில் ஐடிஆர் தாக்கல் செய்தவர்களுக்கு இந்த விதியின் கீழ் சலுகைகள் கிடைக்கும். ஐ டி ஆர் தாக்கல் செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கி கணக்கில் இருந்து டிடிஎஸ் செலுத்தாமல் ஒரு நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாய் வரை ரொக்கமாக எடுக்கலாம்.

இந்த வருமான வரி சட்டத்தின்படி ஐ டி ஆர் தாக்கல் செய்யாதவர்கள் ரூபாய் 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் இரண்டு சதவீத டிடிஎஸ் கட்ட வேண்டும். ஐ டி ஆர் தாக்கல் செய்தவர்கள் ஒரு கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 5 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு ஏற்கனவே கட்டணம் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது சேவை கட்டணமாக ரூபாய் 21 வங்கிகள் வசூலிக்கின்றன. பெரும்பாலான வங்கிகள் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு மாதமும் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்கின்றன. அதனால் இனி வங்கியில் இருந்தோ ஏடிஎம்மில் இருந்தோ பண பரிவர்த்தனை செய்யும் போது அதன் எண்ணிக்கையை கணக்கிட்டு கொள்ளுங்கள். முன்னமே திட்டமிட்டு செயல்படுங்கள்.