இன்று (செப்.15) பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள். தமிழ்நாட்டின் கோவில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்தவருக்கு இயல்பாகவே நல்ல பேச்சு வளமும், சிந்திக்கும் திறனும் இருந்தது. மேலும் பெரியாரின் திராவிடக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பெரியாருடன் இணைந்து அரசியல் களத்தின் தத்துவஞானியாகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பித்து அதன் முதல் தலைவராக விளங்கினார் அறிஞர் அண்ணா. இலக்கிய உலகிலும், நாடகங்கள், திரைப்படங்கள், சிறுகதைகள் என அனைத்திலும் முத்திரை பதித்து மூட நம்பிக்கைகளை அகற்றும் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும், திராவிடக் கொள்கைகளையும் மக்களிடையே விதைத்தார்.
இவரது கருத்துக்களை கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் திரைப்படங்கள் வாயிலாக முன்னெடுத்துச் சென்றனர். ஒருமுறை அண்ணா வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் அங்கிருந்த கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அண்ணாவின் புலமையைச் சோதிக்க எண்ணி ஒரே ஒரு ஆங்கில வார்த்தையை 3 முறை வரும் வகையில் ஒரு வாக்கியத்தினை உருவாக்குமாறு கேட்டார்களாம்.
தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்.. இன்னும் விலை உயருமா? காரணம் என்ன?
அறிஞர் அண்ணா சட்டென தயங்காமல் Because என்ற அந்த ஆங்கில வார்த்தையை வைத்து Because is a conjunction because, because is not a word” என்று பதில் அளித்து வாயடைக்க வைத்திருக்கிறார் அறிஞர் அண்ணா. மேலும் ஏராளமான பொன்மொழிகளையும் கூறியிருக்கிறார். மெட்ராஸ் மாநிலம் என்பதை பெயர் மாற்றி தமிழ்நாடு என்று சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருக்கும் போது தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்து வரலாற்றில் இடம்பெற்றார்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு.. ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்ற பல புகழ்பெற்ற பொன்மொழிகளுக்குச் சொந்தக் காரரான அறிஞர் அண்ணா 1969-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
இதுமட்டுமன்றி சுதந்திரப் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்து பல கூட்டடங்களை நடத்தியும், திராவிட இயக்கத்தினை தமிழகத்தில் வேரூன்றச் செய்த முக்கியத் தலைவராகவும் திகழ்ந்தார் அறிஞர் அண்ணா.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
