இந்தியா முழுவதும் தீபாவளி சிறப்பாக வெவ்வேறு விதமான வகையில் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை செய்தும் வாங்கியும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் தென் தமிழகத்தில் வெகுவாக தீபாவளி தினத்தன்று பருப்புச் சோறும், அதற்கு இணையாக கருவாட்டுக் குழம்பும் வைத்து படைக்கப்படுகிறது.
இது ஒரு வித்தியாசமான காம்பினேஷனாக தெரியலாம், ஆனால் தென் தமிழகத்தில் தீபாவளியன்று இந்தவிதமான உணவுதான் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
நவீன கால குழந்தைகள் இத்தகைய சத்துமிக்க உணவுகளை உண்ண விரும்பாத காரணத்தினால், ஆடு, கோழி போன்ற அசைவ உணவுகளை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். இருப்பினும் இன்றும் பல வீடுகளில் காலையில் வழிபாட்டின்போது பருப்பு சோறு, கருவாட்டுக் குழம்பு, அத்துடன் அந்தந்த வீடுகளுக்கேற்ப நெய்யினையும் பயன்படுத்த செய்கின்றனர்.
இவை தவிர வீடுகள் தோறும் முறுக்கு, சீடை போன்ற கார பலகாரங்களும், அதிரசம், குலோப் ஜாமும் போன்ற இனிப்பு பலகாரங்களும் இன்றும் நடைமுறையில் இருந்துவருகின்றன.
இவற்றை செய்ய முடியாத சூழ்நிலை வரும்போது கடைகளில் வாங்கியாவது கொண்டாட்டம் நடைபெறுகிறது. அத்துடன் வீட்டில் செய்யும் பலகாரங்களை அக்கம் பக்கத்தில் கொடுத்து அன்பு பாராட்டுகின்றனர்.